சென்னை: தீபாவளி பண்டிகையை முன்னிட்டு கூட்டுறவுத் துறையில் பணியாற்றும் ஊழியர்களுக்கு போனஸ் வழங்க தமிழக அரசு உத்தரவிட்டு உள்ளது.

நாடு முழுவதும் தீபாவளியையொட்டி, அரசு பொதுத்தறை நிறுவனங்கள், வணிக நிறுவனங்கள், தனியார் நிறுவனங்கள் போனஸ் அறிவித்து, வழங்கி வருகின்றன. இந்தியன் ரயில்வே ஊழியர்களின் 78நாள் சம்பளத்தை போனசாக அறிவித்து உள்ளது. தமிழகஅரசு, பொதுத்துறை நிறுவனங்களில் பணிபுரியும் சி, டி பிரிவு ஊழியர்களுக்கு 10 சதவிகித போனஸ் வழங்கி உள்ளது. அதன்படி,  8.33% போனஸ் மற்றும் கருணைத் தொகை 1.67% என மொத்தம் 10% வழங்க உத்தரவிடப்பட்டுள்ளது

இந்த நிலையில், தற்போது, தீபாவளி பண்டிகையை முன்னிட்டு கூட்டுறவுத் துறையில் பணியாற்றும் ஊழியர்களுக்கு போனஸ் வழங்க தமிழக அரசு உத்தரவு பிறப்பித்துள்ளது.