சென்னை: தீபாவளி பண்டிகையை முன்னிட்டு, பொதுமக்களின் வசதிக்காக இரவு நேரங்களில் 60 சிறப்பு பேருந்துகள் இயக்கப்பட உள்ள தாக சென்னை மாநகர போக்கு வரத்து துறை தெரிவித்து உள்ளது.
வரும் 12-ம் தேதி ஞாயிறன்று தீபாவளி பண்டிகை கொண்டாடப்படவுள்ளது. இதற்காக பொதுமக்கள் சொந்த ஊர்களுக்கு செல்லும் வகையில், தமிழ்நாடு அரசு, வழக்கமாக இயக்கும் பேருந்துகளுடன் சிறப்பு பேருந்துகள் இயக்கி வருகின்றன. பேருந்து நிலையங்கள், கோயம்பேடு, மாதவரம் பேருந்து நிலையம், கே.கே.நகர் பேருந்து நிலையம், தாம்பரம் மெப்ஸ் பேருந்து நிலையம், தாம்பரம் ரயில் நிலைய பேருந்து நிறுத்தம், பூவிருந்தவல்லி பைபாஸ் (மாநகர போக்குவரத்துக் கழக பணிமனை), என ஒவ்வொரு பகுதிகளுக்கும் பிரித்து இருப்பதால், பொதுமக்கள் பேருந்து நிலையங்களுக்கு செல்ல ஆட்டோ மற்றும் டாக்சிகளை நாடும் நிலையே உள்ளது.
இதையடுத்து அவரவர் செல்லும் ஊர்களுக்கு ஏற்ப பேருந்து நிலையங்களுக்குச் செல்லும் வகையில் மாநகர பேருந்துகளை இயக்க தமிழ்நாடு அரசு முன் வந்துள்ளது. அதன்படி பேருந்து நிலையங்களை இணைக்கும் வகையில் கோயம்பேட்டில் இருந்து மாநகர பேருந்துகள் இயக்கப் பட்டன. இந்த பேருந்துகள் பகல் நேரங்களில் மட்டுமே இயக்கப்படுவதால், இரவு நேரங்களில் ஊர்களுக்கு செல்வோர், வருவோர் பேருந்து கிடைக்காமல் சிரமப்பட்டு வருகின்றன. இதை தடுக்கும் வகையில் இரவு நேர பேருந்துகளையும் இயக்க மாநகர பேருந்து நிர்வாகம் முடிவு செய்துள்ளது.
அதன்படி, நம்பர் 13ந்தேதி முதல் 15ம் தேதி வரை மாலை, இரவு நேரங்களில் 60 சிறப்பு பேருந்துகள் இயக்க உத்தரவிடப்பட்டுள்ளதாக அறிவிக்கப்பட்டு உள்ளது. தீபாவளி விடுமுறை முடிந்து சென்னை திரும்புவர்களின் வசதிக்காக இந்த பேருந்துகள் இயக்கப்பட இருப்பதாக தெரிவிக்கப்பட்டுள்ளது