சென்னை: தீபாவளியையொட்டி சென்னையில் இருந்து கடந்த இரு நாட்களில் 2,31,363 பேர் பயணம் செய்துள்ளதாக தமிழ்நாடு அரசு விரைவு போக்குவரத்துக் கழகம் தெரிவித்து உள்ளது.
தீபாவளி பண்டிகையையொட்டி, சென்னையில் இருந்து நேற்று முன்தினம் (செவ்வாய்கிழமை)  மட்டும் அரசு பேருந்துகள் மூலம் 1,10,745 பேர் பயணம் செய்துள்ளதாகவும், இன்னும் 69% இருக்கைகள் காலியாக இருப்பதாகவும் தெரிவிக்கப்பட்டது. இந்த நிலையில், நேற்று  சென்னையில் இருந்து மொத்தம் 4059 பேருந்துகள் இயக்கிய நிலையில் அதன்மூலம் 2,31,363 பயணிகள் சொந்த ஊருக்கு பயணம் செய்துள்ளனர் என தெரிவிக்கப்பட்டுள்ளது. வழக்கமாக இயங்கும் 2092 பேருந்துகளுடன் 1967 சிறப்பு பேருந்துகளும் இயக்கப்பட்டன என தமிழ்நாடு அரசு போக்குவரத்துத் துறை தெரிவித்துள்ளது.

இந்த ஆண்டு  தீபாவளி பண்டிகை வரும் 31ந்தேதி கொண்டாடப்பட உள்ள நிலையில், தொடர்ந்து 4 நாட்கள் அரச விடுமுறை  கிடைத்துள்ளது. இதனார்ல் சென்னையில் வசிக்கும் வெளியூர்வாசிகள்   தங்களது சொந்த ஊர்களுக்கு செல்ல தயாராகி விட்டனர். இதன் காரணமாக, கூட்ட  நெரிசலை தவிர்க்க தமிழ்நாடு அரசு சிறப்பு பேருந்துகளை இயக்கி வருகிறது.எ அதன்படி,  சென்னையில் இருந்து அக்டோபர் 28ந்தேதி  இரவு முதல்  சிறப்பு பேருந்துகள் இயக்கப்படுகிறது. மொத்தம் 14ஆயிரத்துக்கும் மேற்பட்ட பேருந்துகள் இயக்கப்பட்டு வருகிறது.   சென்னை பயணிகளின் வசதிக்காக  மட்டும் 11,176 சிறப்புப் பேருந்துகளை அரசு  போக்குவரத்து கழகம் இயக்குகிறது. அதன்படி,    கிளாம்பாக்கம், கோயம்பேடு, மாதவரம் ஆகிய மூன்று பேருந்து நிலையங்களில் இருந்து வெளியூர்களுக்கு சிறப்புப் பேருந்துகள் இயக்கப்படுகிறது.

மேலும், பயணிகளின் வசதிக்காக,  கிளாம்பாக்கத்தில், மாநகர பேருந்து நிறுத்தும் இடத்தில் இருந்து வெளியூா் பேருந்துகள் புறப்படும் இடத்துக்கு இடையே, 8 மின்சார பேருந்துகளும், மாநகர இணைப்புப் பேருந்துகளும் இயக்கப்பட்டு வருகிறது.
மேலும் பயணிகள் தங்களது ஊருக்கு செல்லும் பேருந்துகள் எங்கே நிற்கிறது என்பது குறித்து  எளிதில் தெரிந்து கொள்ளும் வகையில், டிஜிட்டல் பலகை, ஒலிபெருக்கி மூலம் பேருந்து இயக்க விவரத்தை அறிவிக்கப்பட்டு வருகிறது.
மேலும், பயணிகளின் வசதிகாக  இருக்கைகள், இலவச மருத்துவமனை, அவசர கால ஊா்தி, பாதுகாப்புக்காக காவல் அதிகாரிகள், 3 மடங்கு அதிகமாக தூய்மைப் பணியாளா்கள், 8 ஏடிஎம் இயந்திரங்கள், சுத்திகரிக்கப்பட்ட குடிநீா் வழங்கும் 18 இயந்திரங்கள், தாய்மாா்கள் பாலூட்ட 3 அறைகள், 140 தங்குமிடம் போன்ற பயணிகளுக்கான அனைத்து ஏற்பாடுகளும் செய்யப்பட்டுள்ளன.

கிளாம்பாக்கம் பேருந்து நிலையம்: புதுச்சேரி, கடலூா், திருச்சி, சிதம்பரம், மதுரை, தூத்துக்குடி, செங்கோட்டை, திருநெல்வேலி, சேலம், கோயம்புத்தூா், வந்தவாசி, போளூா், திருவண்ணாமலை, கும்பகோணம், தஞ்சாவூா் வழி செல்லும் பேருந்துகள்.

கோயம்பேடு பேருந்து நிலையம்: கிழக்கு கடற்கரை சாலை, காஞ்சிபுரம், வேலூா், பெங்களூரு, திருத்தணி வழியாக செல்லும் பேருந்துகள்.

மாதவரம் பேருந்து நிலையம்: பொன்னேரி, ஊத்துக்கோட்டை வழியாக ஆந்திர மாநிலம் மாா்க்கமாக செல்லும் பேருந்துகள், வழக்கமாக இயக்கப்படும் திருச்சி, சேலம், கும்பகோணம், திருவண்ணாமலை பேருந்துகள். உதவி எண்கள் பிரத்யேக உதவி எண்கள் : 7845700557, 7845727920, 7845740924. அரசுப் பேருந்துகள் விவரம், புகாா் – 94450 14436 ஆம்னி பேருந்துகள் புகாா் – 044 2474 9002, 2628 0445, 2628 1611