சென்னை:
தீபாவளி நேரத்தில் சென்னையில் இருந்து வெளியூர் செல்ல ஆம்னி பேருந்து கட்டணம் எவ்வளவு என்பதை ஆம்னி பஸ் உரிமையாளர்கள் சங்கம் அறிவித்துள்ளது.
தீபாவளி பண்டிகையையொட்டி, வருகிற 27-ந் தேதி முதல் 31-ந் தேதி வரை தமிழகம் முழுவதும் வழக்கமான 600 ஆம்னி பேருந்துகளுடன் கூடுதலாக 600 ஆம்னி பேருந்தகள் என மொத்தம் 1,200 ஆம்னி பஸ்கள் இயக்கப்படும் என்றும் குறிப்பிட்ட கட்டணமே வசூலிக்கப்படும் என்றும் தெரிவித்துள்ள ஆம்னி பஸ் உரிமையாளர்கள் சங்கம், கட்டண விவரத்தையும் அறிவித்துள்ளது.
தீபாவளிக்கு ஆம்னி பஸ்கள் இயக்குவது மற்றும் ஆம்னி பஸ்கள் கட்டணம் சம்பந்தமாக கடந்த 13-ந் தேதி சென்னை தலைமைச் செயலகத்தில் போக்குவரத்து அமைச்சர் மற்றும் போக்குவரத்துத்துறை கமிஷனர் முன்னிலையில் சங்க நிர்வாகிகள் ஆலோசனை கூட்டம் நடந்தது. இதில் ஆம்னி பஸ்களின் கட்டணம் குறித்து ஆலோசிக்கப்பட்டது. இறுதியில் சங்க நிர்வாகிகள் ஒருமனதாக கட்டண பட்டியல் நிர்ணயம் செய்தனர். நிர்ணயிக்கப்பட்டு உள்ள இந்த கட்டணத்துக்கு மிகாமல் கட்டணம் வசூலிப்பது எனவும் முடிவு எடுக்கப்பட்டது.
நிர்ணயித்துள்ள கட்டணத்துக்கு அதிகமாக டிக்கெட் கட்டணம் வசூலித்தால் சம்பந்தப்பட்ட நபர்கள் குறித்து 044-32000090 என்ற தொலைபேசி எண்ணுக்கு புகார் அளிக்கலாம் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.
கட்டண அட்டவணை: