சென்னை,
தீபாவளி போனஸ் கோரி, வரும் 28ந்தேதி முதல் 108 ஆம்புலன்ஸ் இயங்காது என தொழிலாளர் சங்கம் அறிவித்து உள்ளது.
போனஸ் கோரி 108 ஆம்புலன்ஸ் ஊழியர்கள் 28ம் தேதி முதல் காலவரையற்ற வேலைநிறுத்தத்தில் ஈடுபடப் போவதபாக  தொழிலாளர்கள்  சங்கம்  தமிழ்நாடு கிளை அறிவிப்பு வெளியிட்டு உள்ளது.
ambu
தமிழகத்தில் 108 ஆம்புலன்ஸ் நிர்வாகத்தில் ஓட்டுனர் (பைலட்), கால் சென்டர் பணியாளர் உள்ளிட்ட பணிகளில் 3,800 ஊழியர்கள் பணிபுரிந்து வருகின்றனர்.
இவர்களுக்கு ஒவ்வொரு ஆண்டும் வழங்கும் போனஸ் தொகை இந்த ஆண்டு இதுவரை வழங்கப்படவில்லை. அதற்கான அறிவிப்பு எதுவும் இதுவரை வெளிவரவில்லை. எனவே, ஊழியர்கள் தங்களுக்கு சட்டப்படி குறைந்தது 8.33 சதவீதம் போனஸ் (அதாவது ஒரு மாத சம்பளம்) தொகையாவது வழங்க வேண்டும் என்று  நிர்வாகத்திடம் முறையிட்டு வருகின்றனர்.
இதுகுறித்து சங்க மாநில செயலாளர்  கூறியதாவது:
108 ஆம்புலன்ஸ் ஊழியர்களுக்கு ரூ.1 கோடியே 83 லட்சத்து 15 ஆயிரம் பண பயன்கள் நிலுவையில் உள்ளது. இந்த ஆண்டு தீபாவளி போனசும் வழங்கப்படவில்லை.
இவை தவிர 108 ஆம்புலன்ஸ் நிர்வாகத்தில் பணிபுரியும் தொழிலாளர்களின் நலனுக்காக தமிழக அரசு எவ்வளவு நிதி ஒதுக்குகிறது என்ற தகவலும் தெரியப்படுத்துவதில்லை.
இவையெல்லாம், குறித்து நிர்வாகத்திடம் முறையிட்டால் தெளிவான பதில் இல்லை.
எனவே, வரும் 28ந் தேதி இரவு 8 மணி முதல் 29ந் தேதி இரவு 9 மணி வரை ஒரு நாள் அடையாள வேலைநிறுத்த போராட்டத்தில் ஈடுபடுவோம்.
அதற்குள் எங்களுடன் பேச்சுவார்த்தை நடத்தி 108 ஆம்புலன்ஸ் நிர்வாகத்தினர் கோரிக்கைகளை நிறைவேற்றா விட்டால் காலவரையற்ற வேலைநிறுத்த போராட்டத்தில் ஈடுபடுவோம்,
என்று கூறினார்.