தமிழகத்தில் அதிகபட்சமாக சென்னையில் 33 சதவீதம் பேருக்கு தடுப்பூசி போடப்பட்டுள்ளது, குறைந்த பட்சமாக திருவண்ணாமலை மாவட்டத்தில் 2.5 சதவீதம் பேருக்கு மட்டுமே தடுப்பூசி போடப்பட்டுள்ளது.

சென்னையில் கொரோனா பரிசோதனை மேற்கொள்ளப்பட்டவர்களில் 9.4 சதவீதம் பேருக்கு பாதிப்பு இருப்பது உறுதியாகி இருக்கிறது.

கடந்த 17 நாட்களுக்கு முன் 26.6 சதவீதமாக இருந்த இந்த பாதிப்பு சதவீதம் தற்போது 9.4 அளவுக்கு குறைந்துள்ளது, இருந்த போதும் தமிழகத்தின் பிற பகுதிகளில் பாதிப்பு சதவீதம் 22.7 சதவீதமாக தொடர்வது கவலையளிப்பதாக உள்ளது என்று கொரோனா தரவு ஆர்வலர் விஜய் ஆனந்த் தனது சமூக வலைதளத்தில் பதிவிட்டுருக்கிறார்.

2021 சட்டமன்ற தேர்தலில் வாக்களித்த 18 வயதுக்கு மேற்பட்டவர்களின் மக்கள் தொகையுடன் ஒப்பிடும் போது சென்னையில் 33 சதவீத மக்களுக்கு தடுப்பூசி போடப்பட்டுள்ளதாக தெரிவித்துள்ளார்.