சென்னை :
தமிழகத்தில் கடந்த 24 மணி நேரத்தில் கொரோனா பாதிப்பு குறித்து மாவட்டம் வாரியான பட்டியல் வெளியாகி உள்ளது.
தமிழகத்தில் கடந்த 24 மணி நேரத்தில் 1714 பேருக்குப் பாதிப்பு உறுதி ஆகி மொத்தம் 7,63,282 பேர் பாதிக்கப்பட்டுள்ளனர். இதில் 11,531 பேர் உயிர் இழந்து 7,37,281 பேர் குணம் அடைந்து தற்போது 14,470 பேர் சிகிச்சையில் உள்ளனர்.
பெரம்பலூர் மாவட்டத்தில் கடந்த இரண்டு நாட்களாக புதிய பாதிப்பு எதுவும் இல்லாமல் பூஜ்யமாக இருந்த நிலையில், இன்று புதிதாக இரண்டு பேருக்கு கொரோனா தொற்று ஏற்பட்டுள்ளது.
சென்னையில் மட்டும் இன்று 479 பேருக்கு கொரோனா பாதிப்பு உறுதி ஆகி உள்ளது. இதுவரை சென்னையில் 2,10,135 பேர் பாதிக்கப்பட்டு இதில் 2,01,649 பேர் குணம் அடைந்து தற்போது 4,698 பேர் சிகிச்சையில் உள்ளனர், 3,788 பேர் உயிர் இழந்துள்ளனர்.
இரண்டாம் இடத்தில் கோவை மாவட்டம் உள்ளது இங்கு இன்று 162 பேர் பாதிக்கப்பட்டுள்ளனர். இதுவரை கோவை மாவட்டத்தில் 46,920 பேர் பாதிக்கப்பட்டு 593 பேர் உயிர் இழந்துள்ளனர். 45,510 பேர் குணம் அடைந்து தற்போது 817 பேர் சிகிச்சையில் உள்ளனர்.
மூன்றாவதாக செங்கல்பட்டு மாவட்டத்தில் இன்று 129 பேருக்கு பாதிப்பு ஏற்பட்டுள்ளது. இதுவரை செங்கல்பட்டு மாவட்டத்தில் 46,275 பேர் பாதிக்கப்பட்டு 44,692 பேர் குணம் அடைந்துள்ளனர். தற்போது 885 பேர் சிகிச்சையில் உள்ள நிலையில் இங்கு இதுவரை 698 பேர் உயிர் இழந்துள்ளனர்.