சென்னை
தமிழகத்தில் இன்றைய (03/04/2021) மாவட்டம் வாரியான கொரோனா பாதிப்பு பட்டியல் வெளியாகி உள்ளது.
தமிழகத்தில் இன்று 3,446 பேருக்குப் பாதிப்பு உறுதியாகி மொத்தம் 8,96,226 பேர் பாதிக்கப்பட்டுள்ளனர். இதில் 12,764 பேர் உயிர் இழந்து 8,63,258 பேர் குணம் அடைந்து தற்போது 20,204 பேர் சிகிச்சையில் உள்ளனர்.
சென்னையில் மட்டும் இன்று 1,290 பேருக்கு கொரோனா பாதிப்பு உறுதி ஆகி உள்ளது. இதுவரை சென்னையில் 2,52,431 பேர் பாதிக்கப்பட்டு 4,264 பேர் உயிர் இழந்து 2,40,454 பேர் குணம் அடைந்து தற்போது 7,713 பேர் சிகிச்சையில் உள்ளனர்.
இரண்டாம் இடத்தில் கோவை மாவட்டம் உள்ளது. இதுவரை கோவை மாவட்டத்தில் 59,821 பேர் பாதிக்கப்பட்டு 694 பேர் உயிர் இழந்து 57,120 பேர் குணம் அடைந்து தற்போது 2,007 பேர் சிகிச்சையில் உள்ளனர்.
மூன்றாவதாக செங்கல்பட்டு மாவட்டம் உள்ளது. இதுவரை செங்கல்பட்டு மாவட்டத்தில் 57,176 பேர் பாதிக்கப்பட்டு 822 பேர் உயிர் இழந்து 54,290 பேர் குணம் அடைந்து தற்போது 2,064 பேர் சிகிச்சையில் உள்ளனர்.