டாக்கா: கொரோனா பரவல் மீண்டும் தீவிரமடைந்துள்ளதால், வங்கதேசத்தில் (பங்களாதேஷ்) ஒரு வாரம் ஊரடங்கு அமல்பமுடுத்தப்பட்டு உள்ளது.

இந்தியாவின் அண்டை நாடான வங்கதேசத்தில் மீண்டும்  கொரோனா தொற்று பரவல் உயர்ந்து வருகிறது. நேற்று ஒரே நாளில் 6830 பேருக்கு புதிதாக தொற்று கண்டறியப்பட்டு உள்ளதால், சுகாதாரத்துறையினர் மட்டுமின்றி ஆட்சியாளர்களும் அதிர்ச்சி அடைந்தனர்.  தற்போதைய நிலையில், கொரோனா பாதிக்கப்பட்டோர் மொத்த எண்ணிக்கை   6லட்சத்துக்கு 25ஆயிரத்தை தாண்டியுள்ளது. நேற்று மட்டும் 50 பேர் கொரோனா தொற்றால் உயிரிழந்த நிலையில், இதுவரை பலியானோர் எண்ணிக்கை 9,155 ஆக அதிகரித்தள்ளது.

இதைத்தொடர்ந்து நாடு முழுவதும் நாளை மறுதினம்  5ஆம் தேதி முதல் 11ந்தேதி வரையிலான  ஒரு  வாரத்துக்கு  ஊரடங்கு அமலில் இருக்கும் என வங்காளதேச  அரசு அறிவித்துள்ளது. இந்த ஊரடங்கின்போது,  அத்தியாவசிய பணிகள் மேற்கொள்ள தடை எதுவும் இல்லை எனவும் தொழிற்சாலைகள் கொரோனா வழிகாட்டுதல்களை பின்பற்றி இயங்கலாம் எனவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.