சென்னை:
தமிழகத்தில் இன்று புதியதாக 55 பேர் கொரோனா வைரசால் பாதிக்கப்பட்டு உள்ள நிலையில், கொரோனா பாதிப்பு எண்ணிக்கை 1323 ஆக உயர்ந்து உள்ளதாக தமிழக சுகாதாரத்துறை தெரிவித்து உள்ளது.
மாவட்ட வாரியாக வெளியிடப்பட்டுள்ள பட்டியலில், சென்னையில் இன்று புதியதாக 11 பேர் உள்பட அதிகப்பட்சமாக சென்னை 228 பேருக்கு கொரோனா தொற்று உறுதியாகி உள்ளது.
இன்று அதிகப்பட்சமாக தஞ்சாவூரில் 17 பேருக்கும், தூத்துக்குடியில் 7 பேருக்கும், தென்காசி, திருவள்ளூரில் தலா 5 பேருக்கு கொரோனா பாதிப்பு உறுதியானது.
தமிழகம் முழுவதும் 34 ஆயிரத்து 841 நோயாளிகள் தீவிர தனிமைப்படுத்தலில் இருக்கின்றனர். தனிமைப்படுத்தல் முடித்தவர்களின் எண்ணிக்கை 74 ஆயிரத்து 326ஆக இருக்கிறது.
இதுவரை 17 ஆயிரத்து 835 பேருக்கு வைரஸ் தொற்று பரிசோதனை மேற்கொள்ளப்பட்டுள்ளது. இதில் 16 ஆயிரத்து 452 பேரின் பரிசோதனை முடிவுகள் பெறப்பட்டுள்ளன. 1,383 பேரின் பரிசோதனை முடிவுகள் வரவுள்ளன.