சென்னை: தமிழ்நாட்டிற்கு இன்று வந்துள்ள 7.21 லட்சம் டோஸ் கொரோனா தடுப்பூசிகள் மாவட்டம் வாரியாக ஒதுக்கீடு செய்யப்பட்டு உள்ளது. அதன் விவரத்தை தமிழ்நாடு அரசு வெளியிட்டு உள்ளது.

நாடு முழுவதும் கொரோனா பரவலை தடுக்கும் நடவடிக்கையாக தடுப்பூசி செலுத்தப்பட்டு வருகிறது.  இதுவரை செலுத்தப்பட்ட தடுப்பூசி டோஸ்களின் மொத்த எண்ணிக்கை: 44,61,56,659 ஆகவும், நேற்று ஒரே நாளில் செலுத்தப்பட்ட தடுப்பூசி டோஸ்களின் எண்ணிக்கை: 40,02,358 என மத்தியஅரசு தெரிவித்துள்ளது.

தமிழ்நாட்டில் இதுவரை  தடுப்பூசி செலுத்திக்கொண்டவர்களின் எண்ணிக்கை 2 கோடியை கடந்தது. தமிழகத்தில் நேற்று (27ந்தேதி)  2.81லட்சம் பேர் தடுப்பூசி செலுத்திக் கொண்டனர். இதுவரை கொரோனா தடுப்பூசி செலுத்திக் கொண்டவர்கள் – 2,00,79,887 கோடி பேர்.

இந்த நிலையில்,  தமிழகத்திற்கு இன்று  மேலும், 5.81 லட்சம் கோவிஷீல்டு டோஸ் தடுப்பூசிகளும் , 1.40 லட்சம் டோஸ் கோவாக்சின் தடுப்பூசிகள் என மொத்தம்  7.21 லட்சம் டோஸ் தடுப்பூசிகள்  வந்தடைந்துள்ளன.  இந்த தடுப்புகள் அனைத்து மாவட்டத்துக்கும் தேவைக்கேற்க  மாவட்ட வாரியாக ஒதுக்கீடு செய்து அனுப்பபட்டுள்ளது. அதன் விவரம் வெளியாகி உள்ளது.