ஈரோடு: காங்கிரஸ் கட்சியின் மூத்த தலைவரும், எம்எல்ஏவுமான இவிகேஎஸ் இளங்கோவன் மறைவை அடுத்து அந்த தொகுதி காலியாக உள்ள நிலையில், அந்த தொகுதியை மீண்டும் காங்கிரஸ் கட்சிக்கு ஒதுக்க வலியுறுத்தி தீர்மானம் நிறைவேற்றப்பட்டு உள்ளது.

கடந்த 2021 சட்டமன்ற தேர்தலில் திமுக கூட்டணியில் காங்கிரஸ் கட்சி  ஈரோடு கிழக்கு சட்டமன்ற தொகுதியில்  போட்டி வெற்றி பெற்றது. இந்த தொகுதி சட்ட உறுப்பினராக இருந்த  மறைந்த இவிகேஎஸ் மகன், திருமகன் ஈவெரா கடந்த ஜனவரி 4, 2023 அன்று காலமானார்.  இதையடுத்து அந்த தொகுதிக்கு இடைத்தேர்தல் நடைபெற்றது. இதில்  ஈவெராவின் தந்தையான ஈவிகேஎஸ் இளங்கோவன் போட்டியிட்டு வெற்றி அடைந்தார். அவரும் உடல்நலம் பாதிக்கப்பட்டு,  கடந்த  2024ம் ஆண்டு டிசம்பர் 14 ஆம் தேதி உயிரிழந்தார்.  இதையடுத்து,  ஈரோடு கிழக்கு சட்டமன்ற தொகுதி காலியானதாக தமிழக சட்டப்பேரவை செயலகம் அறிவித்து. மேலும்  தேர்தல் ஆணையத்துக்கு தெரியப்படுத்தியுள்ளது.

ஒரு தொகுதி காலியானதாக அறிவித்த நாளில் இருந்து 6 மாதத்திற்குள்ளே இடைத்தேர்தல் நடத்தப்பட வேண்டும். இந்த சூழ்நிலையில் விரைவில் ஈரோடு கிழக்கு சட்டமன்றத் தொகுதிக்கான இடைத்தேர்தலும் அறிவிக்கப்படலாம் என எதிர்பார்க்கப்படுகிறது.

இதற்கிடையில் ஈரோடு கிழக்கு தொகுதியை திமுகவுக்கு வழங்க முடிவு செய்திருப்பதாக தகவல்கள் வெளியாகி வருகின்றன. இதையடுத்து,  ஈரோடு கிழக்கு தொகுதியை காங்கிரஸுக்கே ஒதுக்க வேண்டும் என்று காங்கிரஸ் நிர்வாகிகள் கூட்டத்தில் தீர்மானம் நிறைவேற்றப்பட்து.

ஈரோட்டில் இன்று(ஜன. 4) நடைபெற்ற காங்கிரஸ் நிர்வாகிகள் கூட்டம் நடைபெற்றது. இதில்,  ஈரோடு கிழக்கு தொகுதியை  காங்கிரஸ் கட்சிக்கே மீண்டும் வழங்க வேண்டும்  ஒருமனதாக இதுகுறித்த தீர்மானம் நிறைவேற்றப்பட்டது.