ஆட்சியர், காவல்துறை அதிகாரிகளுக்கு தேர்தல் ஆணையம் உத்தரவு!

Must read

 
சென்னை:
மிழக மாவட்ட ஆட்சி தலைவர்களுக்கும், காவல்துறை அதிகாரிகளுக்கும் தேர்தல் ஆணையம் உத்தரவு பிறப்பித்துள்ளது.
சமுக விரோதிகள் கண்காணிக்கப்பட்டு, மக்கள் சுதந்திரமாக தேர்தலில் வாக்களிக்க முழுமையான பாதுகாப்பு வழங்கப்பட வேண்டும் என்று கூறி உள்ளது.
தமிழ்நாடு மாநில தேர்தல் ஆணையத்தின் மக்கள் தொடர்பு அலுவலர் வெளியிட்ட அறிக்கையில் கூறியிருப்பதாவது:
tbevb
தேர்தல் நடைபெறும் காலங்களிலும், தேர்தல் நடைமுறைகள் முடிவடையும் வரையிலும் தனிநபர்கள் துப்பாக்கி வைத்திருக்க உரிமம் வழங்குவதற்கான தடையை உறுதியாக நடைமுறைப்படுத்த வேண்டும்.
சமூக விரோதிகளைக் கடுமையாகக் கண்காணித்து தேவைப்படும்போது சட்டத்துக்குட்பட்டு அவர்கள் மீது நடவடிக்கை மேற்கொள்ள வேண்டும்.
வாக்காளர்கள் சுதந்திரமாகவும், நியாயமாகவும் வாக்களிக்கும் வகையில் அவர்களுக்கு முழுமையான பாதுகாப்பு அளிக்கப்பட வேண்டும்.
மாவட்ட காவல்துறை கண்காணிப்பாளர்கள் சட்டம்-ஒழுங்கு நிலைமை குறித்து மாவட்ட தேர்தல் அலுவலர்கள், மாவட்ட கலெக்டர்களுடன் விரிவாக விவாதிக்க வேண்டும்.
குற்றப் பின்னணி உடையவர்கள் மீதும் ஏற்கனவே தேர்தல் காலங்களில் கலவரங்களில் ஈடுபட்டவர்கள் மீதும் கடுமையான நடவடிக்கை எடுக்கப்பட வேண்டும்.
தேர்தல் அறிவிக்கப்பட்ட உடனே, 1973-ம் ஆண்டு குற்றவியல் நடைமுறைச் சட்டத்தின் 144 பிரிவின்படி ஆயுதங்கள் எடுத்து செல்வதற்கு தடை உத்தரவு பிறப்பிக்கப்பட வேண்டும்.
தேர்தல் முடிவுகள் அறிவிக்கப்படும் நாள் வரையில் இத்தடை உத்தரவு நடைமுறையில் இருக்க வேண்டும்.
தேர்தல் நாளுக்கு முந்தைய 3 நாட்களில் இருந்து இலகுரக வாகனங்கள், லாரிகள் ஆகியவற்றை முழுமையான சோதனை செய்வதன் மூலம் மாவட்டத்தில் கடுமையான கண்காணிப்பை செயல்படுத்த வேண்டும்.
இதன் மூலம் தேர்தல் நடத்தப்படும் பகுதிகளில் விரும்பத்தகாத சமூகவிரோதிகள், துப்பாக்கிகள் மற்றும் ஆயுதங்களை வாகனங்களில் கொண்டு செல்லவில்லை என்பதை உறுதிப்படுத்த வேண்டும்.
ஆயுதங்கள் கொண்டு செல்ல பிறப்பிக்கப்பட்ட 144 தடை உத்தரவு ஆணையின் நகல் அந்தந்த மாவட்டங்களில் உள்ள அங்கீகரிக்கப்பட்ட அரசியல் கட்சிகளின் அலுவலகங்களுக்கு உடனடியாக அனுப்பப்பட்டு அவர்களிடம் இருந்து ஒப்புதல் பெறப்பட வேண்டும்.
மாவட்ட கலெக்டர்கள், காவல்துறை கண்காணிப்பாளர்கள் இடையே சிறப்பான புரிந்துணர்வும், ஒத்துழைப்பும் தகவல் பரிமாற்றம் இருக்க வேண்டும்.
பொதுமக்கள் இடையே நம்பிக்கையையும், பாதுகாப்பு உணர்வையும் ஏற்படுத்தி சுதந்திரமான, நியாயமான, அமைதியான தேர்தல் நடைபெறுவதை உறுதி செய்யும் வகையில் கலெக்டர்கள், காவல்துறை கண்காணிப்பாளர்களிடையே நட்புணர்வும், நேர்மறையான எண்ணங்களும், முழுமையான நம்பிக்கையுடன் கூடிய அணுகுமுறையும் இருக்க வேண்டும்.
இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.
 

More articles

Latest article