அப்பாவிகளை தாக்குவது வருத்தம் தருகிறது : நடிகர் விஜய் சேதுபதி

Must read

sethu
சென்னை:
காவிரி நதிநீர் பிரச்சினையில் சாதாரண பொதுமக்கள் தாக்கப்படுவது வருத்தம் அளிக்கிறது என்று நடிகர் விஜய் சேதுபதி கூறியுள்ளார்.
காவிரி பிரச்சினையில் தென்னிந்திய நடிகர் சங்கம் ஏதும் செய்ய முற்படாத நிலையில், உலக நாயகன், சூப்பர் ஸ்டார், தல, தளபதி போன்ற நட்சத்திரங்கள் வாயை பொத்திக் கொண்டிருக்கும் வேளையில் விஜய் சேதுபதி இதுபோன்ற ஒரு தகவல் முகநூலில் பகிர்ந்திருப்பது வரவேற்கத்தக்கது.
நடிகர்களில் இவர் ஒருவருக்காவது தமிழர்கள் பற்றிய அக்கறை இருப்பது சற்றே ஆறுதல் தருகிறது.
அவர் பேஸ்புக்கில் எழுதியிருப்பதாவது:
நம்முடைய பிரச்சினைகளை தீர்க்கத்தான் நாம் ஓட்டு போட்டு அரசியல் தலைவர்களை தேர்வு செய்திருக்கிறோம் என்றும், இந்த பிரச்சினையை அரசாங்கம் கையாளட்டும் என்றும் கூறியுள்ளார்.
காவிரி நதிநீர் பிரச்சினை உச்சக்கட்டத்தை எட்டியுள்ளது. கர்நாடகாவில் தமிழர்கள் தாக்கப்படுவதும், தமிழக பதிவெண் கொண்ட வாகனங்கள் எரிக்கப்படுவதும் அதிகரித்து வருகிறது.
இது சமூக வலைத்தளங்களில் பரவி கொந்தளிப்பை ஏற்படுத்தி வருகிறது.இந்த சம்பவம் குறித்து நடிகர் விஜய் சேதுபதி தனது முகநூல் பக்கத்தில் கருத்து கூறியுள்ளார். தயவு செய்து வன்முறையை யாரும் கையாள வேண்டாம் என்றும் பொதுமக்களை தாக்க வேண்டாம் என்றும் விஜய் சேதுபதி கேட்டுக்கொண்டுள்ளார்.
காவிரி பிரச்சினையை அரசியல்வாதிகள் பார்த்துக்கொள்வார்கள் என்றும் அவர் கூறியுள்ளார்.

More articles

1 COMMENT

Latest article