சென்னை: தமிழக சட்டமன்ற தேர்தல் நெருங்கியுள்ள நிலையில் திமுக தலைமைமீது கொண்ட அதிருப்தி காரணமாக  கரூர் சின்னசாமி  எடப்பாடி முன்னிலையில் அதிமுகவில் இணைந்துள்ளது  பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.

தமிழக சட்டமன்ற தேர்தல் ஏப்ரல் 6ல் நடைபெற உள்ள நிலையில், தமிழக அரசியல் களம் பரபரப்பாக காணப்படுகிறது.  இந்த நிலையில், சட்டமன்ற தேர்தலில் போட்டியிட விருப்ப மனு வழங்கிய முன்னாள் திமு கஅமைச்சர் சின்னசாமிக்கு மீண்டும் தேர்தலில் போட்டியிட வாய்ப்பு வழங்கப்படாததால் அதிருப்தியில் இருந்து வந்தார். இந்த நிலையில், அவர் திடீரென திமுகவில் இருந்து விலகி திமுகவில் இணைந்துள்ளார்.
கரூர் மாவட்டத்தைச் சேர்ந்தவர்  சின்னசாமி. இவர் ஆரம்பகாலத்தில் அதிமுக எம்எல்ஏவாகவும், அமைச்சராகவும் பதவி வகித்தவர். இவர் கடந்த பத்தாண்டுகளுக்கு முன்பு, அதிமுகவில் இருந்து விலகி திமுகவில் இணைந்தார். திமுகவின் மாநில விவசாய அணி செயலாளராக செயல்பட்டு வந்த சின்னசாமி இந்தமுறை அரவக்குறிச்சி மற்றும் மணப்பறை தொகுதியில் சீட்டு கேட்டுள்ளதாக கூறப்படுகிறது.
இந்த இரண்டு தொகுதியிலும் சீட்டு கிடைக்காததால் அதிர்ப்த்தி அடைந்த சின்னசாமி கரூரில் தேர்தல் பிரசாரம் செய்துவரும்முதல்வர் எடப்பாடி பழனிசாமி முன்னிலையில் தனது ஆதரவாளர்களுடன் மீண்டும் அதிமுகவில் இணைந்துள்ளார்.
சமீபத்தில் திமுக முன்னாள் அமைச்சர் முல்லைவேந்தன்  அதிமுகவில் இணைந்தது குறிப்பிடத்தக்கது.