வேலூர்:

விதவைப் பெண்ணுடன் கள்ளக்காதல் வைத்திருந்த இளைஞர், உல்லாசத்துக்கு இடையூறாக இருந்து வந்த, பெண்ணின் மகளுக்கு உடல் முழுவதும் சிகரெட்டால் சூடு வைத்து சித்ரவதை செய்துள்ள சம்பவம் பெரும் அதிர்ச்சியையும், சோகத்தையும் ஏற்படுத்தி உள்ளது.

வேலூர் மாவட்டத்தைச் சேர்ந்த அரியூர் பகுதியில் கணவனை இழந்து தனியாக தனது பெண் குழந்தையுடன் வாழ்ந்து வரும்  இளம்பெண் ஒருவருக்கும், அந்த பகுதியைச் சேர்ந்த வாலிபர் ஒருவருக்கும் இடையே தகாத உறவு ஏற்பட்டுள்ளது.

இதன் காரணமாக இருவரும் ஒருவருக்கொருவர் நெருங்கி பழகி வந்த நிலையில், இளம்பெண் ணுடன் தனிமையில் இருக்க விரும்பிய இளைஞர், அதற்கு இடையூறாக இருந்த பெண் குழந்தை யின் உடலில் சிகரெட்டால் சூடு வைத்து கொடுமைப்படுத்தி உள்ளார். இதை அந்த இளம்பெண் ணும் கண்டுக்காமல் இருந்துள்ளார்.

உடல் முழுவதும் சிகரெட் சூட்டினால் புண் ஏற்பட, வலி தாங்காமல் அழுதுகொண்டிருந்த சிறுமியை அக்கம்பக்கத்தினர் விசாரித்தபோது, இந்த பகீர் தகவல் வெளியானது. இதுகுறித்து காவல்துறைக்கு புகார் கொடுக்கப்பட்ட நிலையில், குழந்தை மீட்டு மருத்துவமனையில் அனுமதித்த போலீசார், குழந்தையின் தாயையும், அவரது கள்ளக்காதலனையும் கைது செய்தனர்.

இந்த சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.

[youtube-feed feed=1]