டெல்லி:

உச்சநீதிமன்றம், உயர்நீதிமன்றங்கள் அளிக்கும் தீர்ப்பை பின்பற்றாத ராஜஸ்தான் மாநில மாவட்ட நீதிபதி மீது நடவடிக்கை எடுக்க உச்சநீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.

பல்வேறு வழக்குளில் உச்சநீதிமன்றம், உயர்நீதிமன்றங்கள் அளிக்கும் தீர்ப்பை மாவட்ட நீதிமன்றங்கள், சார்பு நீதிமன்றங்கள் உள்ளிட்ட கீழமை நீதிமன்றங்கள் பின்பற்ற வேண்டும் என்பது விதி. இந்த விதியை பின்பற்றாத ராஜஸ்தான் மாநில மாவட்ட நீதிபதி ஒருவர் மீது குற்றம்சாட்டப்பட்டது.

இது தொடர்பாக உச்சநீதிமன்றத்தில் அவர் தாக்கல் செய்த மனு அளிக்கப்பட்ட விபரங்களை உச்சநீதிமன்ற நீதிபதிகள் குரியன் ஜோசப், கான்வில்கர் ஆகியோர் ஏற்க மறுத்துவிட்டனர்.

அந்த மாவட்ட நீதிபதி மீது ஒழுங்கு நடவடிக்கை எடுக்க வேண்டும் என்ற உச்சநீதிமன்றத்தின் உத்தரவு நீண்ட காலமாக நிலுவையில் உள்ளது. இதை உடனடியாக அமல்படுத்த விரைந்து முடிவெடுக்க வேண்டும் என்று உயர்நீதிமன்றத்துக்கு நீதிபதிகள் உத்தரவிட்டுள்ளனர்.

நீதிபதியின் இந்த செயல் நீதித்துறை அதிகாரிகள் இடையிலான ஒற்றுமையை பாதிக்க கூடிய செயல் என்று நீதிபதிகள் கருத்து தெரிவித்தனர்.