ர்லாண்டோ, அமெரிக்கா

மெரிக்க நாட்டின் மிகப் புகழ் பெற்ற தீம் பார்க் டிஸ்னி உலகம் இர்மா புயல் காரணமாக நேற்றும் இன்றும் மூடப்பட்டுள்ளது.

 

அமெரிக்காவில் ஆர்லாண்டோ நகரில் அமைந்துள்ளது உலகப் புகழ் பெற்ற டிஸ்னி ஒர்ல்ட்.  இதன் பரப்பளவு சுமார் 25000 ஏக்கர்கள் ஆகும்.  இதனுள் நான்கு தீம் பார்க்குகள் உள்ளன.  அவை மேஜிக் கிங்டம், எப்காட்,  அனிமல் கிங்டம் மற்றும் ஹாலிவுட் ஸ்டூடியோஸ் ஆகும்.  அது தவிர நீர் விளையாட்டுக்கள், ஓட்ட்ல்கள் போன்றவைகளும் உள்ளன.  டிஸ்னி ஓர்ல்டுக்கு சென்ற வருடம் மட்டும் 2 கோடி பார்வையாளர்கள் வந்தனர்.  சுமார் 73000 இங்கு பணி புரிகின்றனர்.

நேற்றும் இன்றும் இந்த டிஸ்னி ஓர்ல்ட் இர்மா புயல் காரணமாக மூடப்படுவதாக நிர்வாகம் அறிவித்துள்ளது.   கடந்த 45 ஆண்டுகளில் இந்த தீம் பார்க் இவ்வாறு மூடப்படுவது ஆறாவது முறையாகும்.  இதற்கு முன்பு சென்ற வருடம் அக்டோபர் மாதம் மாத்யூ புயல் காரணமாக மூடப்பட்டது.  நேற்று நடை பெற இருந்த ஒரு நிகழ்ச்சிக்கு ஆயிரக்கணக்கானோர் டிக்கட் வாங்கி இருந்தனர்.  அவர்கள் விரும்பினால் வேறு ஏதும் நிகழ்வுக்கு மாற்றிக் கொள்ளலாம், அல்லது முழுப்பணமும் திருப்பித் தரப்படும் எனவும் நிர்வாகம் அறிவித்துள்ளது.

[youtube-feed feed=1]