திமுக-காங்கிரஸ் கூட்டணிக்குள் குழப்பத்தை ஏற்படுத்த முயன்றதாகக் கூறி, தொழில் வல்லுநர்கள் காங்கிரஸ் மற்றும் தரவு பகுப்பாய்வு பிரிவின் தலைவர் பிரவீன் சக்ரவர்த்தி மீது ஒழுங்கு நடவடிக்கை எடுக்க அகில இந்திய காங்கிரஸ் தலைமை முடிவு செய்துள்ளது.
மேலும், தமிழக அரசியல் குறித்து ராகுல் காந்திக்கு அவர் தவறான தகவல்களை அளித்ததாகக் கூறப்பட்டதைத் தொடர்ந்து, விரைவில் அவர் மீது நடவடிக்கை எடுக்கப்படும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

ஓழுக்கு நடவடிக்கை எடுக்கும்பட்சத்தில், பிரவீன் சக்ரவர்த்தி விஜய்யின் தவெக கட்சியில் சேர பேச்சுவார்த்தை நடத்தி வருவதாகத் தெரிகிறது.
ஏற்கனவே, இவரது செயல்பாடுகள் கட்சிக்கு பொருத்தமற்றதாக இருப்பதாகக் கூறி தேர்தலில் போட்டியிட காங்கிரஸ் தலைமை வாய்ப்பு மறுத்ததாகக் கூறப்படுகிறது.
2026ம் ஆண்டு நடைபெற உள்ள தமிழ்நாட்டு சட்டமன்ற தேர்தல் கூட்டணி தொடர்பாக பேச காங்கிரஸ் கட்சி சார்பில் ஐந்து பேர் கொண்ட குழு அமைக்கப்பட்டுள்ளது.
இந்த குழு இரு தினங்களுக்கு முன் திமுக தலைமை நிலையத்தில் பேச்சுவார்த்தையில் ஈடுபட்டது.
இந்த நிலையில் பிரவீன் சக்கரவர்த்தி மீது நடவடிக்கை தொடர்பான செய்தி கவனத்தை ஈர்த்துள்ளது.