சென்னை

ன்றும் தமிழகத்தில் கனமழைக்கு வாய்ப்புள்ளதால் பேரிடர் மீட்புப் படைகள் தயார் நிலையில் உள்ளன. 

கடந்த ஆண்டைவிட இந்த ஆண்டு தமிழகத்தில் தென்மேற்கு பருவ மழை 54% அதிகமாகப் பெய்துள்ளது.  எனவே கடந்த சில நாட்களாகக் கனமழை காரணமாகப் பல மவட்ட்ங்களில் வெள்ளம் ஏற்பட வாய்ப்புள்ளதாக வானிலை ஆய்வு மையம் எச்சரிக்கை விடுத்துள்ளது.

இன்றும்  நீலகிரி மற்றும் கோயம்புத்தூர் மாவட்டங்களில் கனமழை முதல் மிகக் கனமழையும், ஓரிரு இடங்களில் அதி கனமழையும் பெய்யக்கூடும். தவிரத் தென்காசி, தேனி, திண்டுக்கல், திருப்பூர், ஈரோடு, தர்மபுரி, கிருஷ்ணகிரி, சேலம், கரூர் மற்றும் நாமக்கல் மாவட்டங்களில் ஓரிரு இடங்களில் கனமழை முதல் மிகக் கனமழையும், கன்னியாகுமரி, திருநெல்வேலி, திருச்சி, திருப்பத்தூர், வேலூர் மற்றும் ராணிப்பேட்டை மாவட்டங்களில் ஓரிரு இடங்களில் கனமழையும் பெய்யக்கூடும்.

இதர பகுதிகளில், ஓரிரு இடங்களில் இடி மற்றும் மின்னலுடன் கூடிய லேசானது முதல் மிதமான மழை பெய்யக்கூடும். கண்காணிப்பு அலுவலர்கள் அவர்களுக்கு ஒதுக்கப்பட்ட மாவட்டங்களுக்குச் சென்றுள்ளனர்.  தமிழக பேரிடர் மீட்புப் படையின் 4 குழுக்கள் கன்னியாகுமரி, திருநெல்வேலி, கோயம்புத்தூர் மற்றும் நீலகிரி ஆகிய மாவட்டங்களில் தயார்  நிலையில் உள்ளனர்.

தேசிய பேரிடர் மீட்பு படையின் இரண்டு குழுக்கள் கன்னியாகுமரி மாவட்டத்திலும், இரண்டு குழுக்கள் நீலகிரி மாவட்டத்திலும் தயார் நிலையில் உள்ளனர் கன.மழை தொடர்பான புகார்களைப் பொதுமக்கள் 1077 மற்றும் 1070 என்ற கட்டணமில்லா தொலைபேசி வாயிலாகவும், வாட்ஸ் அப் எண் 94458 69848 மூலமாகவும் தொடர்பு கொண்டு புகார்களை பதிவு செய்யலாம் என அரசு அறிவித்துள்ளது.