டில்லி,

ன்று தாக்கல் செய்த பட்ஜெட்டில் வருமான வரி உச்சரம்பில் மாற்றம் செய்யப்படும் என எதிர்பார்த்த நிலை யில், அதில் எந்தவித மாற்றமும் செய்யப்படாமல், வரி செலுத்துவோர் எண்ணிக்கை அதிகரித்துள்ளதாக நிதி அமைச்சர் அருண்ஜெட்லி கூறி உள்ளார்.

இதன் காரணமாக  அரசு மற்றும் தனியார் நிறுவனங்களில் வேலை செய்து மாதாந்திர சம்பளத்தை எதிர்நோக்கி காலத்தை கழித்து வரும் நடுத்தர வர்க்கத்தினர் ஏமாற்றத்துக்கு ஆளாகி உள்ளனர்.

தற்போது ஆண்டுக்கு ரூ.2.5 லட்சம் வரை வருமானம் ஈட்டுவோருக்கு வருமான வரியிலிருந்து விலக்கு அளிக்கப்பட்டுள்ளது.  இதுவரை ரூ.2.5 லட்சம் முதல் ரூ.5 லட்சம் வரை சம்பாதிப்பவர்களுக்கு 10 சதவீதம் வரியும், ரூ.5 லட்சம் முதல் ரூ.10 லட்சம் வரை வருமானம் ஈட்டுபவர்களுக்கு 20 சதவீதமும், ரூ.10 லட்சத்துக்கும் அதிகம் வருமானம் ஈட்டுபவர்களுக்கு 30 சதவீதமும் தற்போது வரி விதிக்கப்பட்டு வருகிறது.

இந்நிலையில், இன்றயை பட்ஜெட்டில், வருமான வரி உச்சவரம்பு 2.5 லட்சம் ரூபாயில் இருந்த ரூ.4 லட்சம் வரை உயர்த்தப்படும் என மக்கள் பெருமளவில் எதிர்பார்த்தனர். அதுகுறித்து மத்திய நிதி அமைச்சகம் பரிசீலிப்பதாக வும் வும் தகவல்கள் வெளியாகி நடுத்தர வர்க்கத்தினருக்கு ஆறுதலை கொடுத்து வந்தது.

இந்நிலையில், வருமான வரி உச்சவரம்பில் எந்த மாற்றமும் இல்லை என  அருண்ஜெட்லி தெரிவித்தார். இது வரி செலுத்தும் மாத சம்பளதாரர்களிடையே பெரும் ஏமாற்றத்தை ஏற்படுத்தி உள்ளது.

ஆனால், ரூ.2.50 லட்சம் முதல் ரூ.5 லட்சம் வரையிலான வருவாய் பிரிவினருக்கான வரி 10 சதவீதத்திலிருந்து 5 சதவீதமாக குறைக்கப்பட்டுள்ளதாக மட்டும் ஜெட்லி அறிவித்தார்.