இஸ்லாமியப் பெண்ணை மணக்கிறார் சிம்பு தம்பி குறளரசன்…!

Must read

 

டி.ராஜேந்தரின் மகனும், சிம்புவின் தம்பியுமான குறளரசன் தான் காதலித்த இஸ்லாமியப் பெண்ணைக் கரம்பிடிக்கிறார்.இவர் ‘இது நம்ம ஆளு’ படத்தின் மூலம் இசையமைப்பாளராக அறிமுகமானார்.

கடந்த பிப்ரவரி 16-ம் தேதி டி.ராஜேந்தர் முன்னிலையில் இஸ்லாம் மதத்துக்கு மாறினார். மணப்பெண்ணின் பெயர் நபீலா ஆர். அஹமத். பி.காம். முடித்துள்ள நபீலாவின் பெற்றோர் பெயர் ரஃபி அஹமத் – ரெஹ்மத் அஹ்மத்.

இவர்களுடைய திருமண வரவேற்பு, வருகிற 29-ம் தேதி சென்னை கிண்டியிலுள்ள ஐடிசி கிராண்ட் சோழா ஹோட்டலில் உள்ள ராஜேந்திர ஹாலில் மாலை 7 மணிக்கு நடைபெறுகிறது.

இத்திருமண விழாவில் கலந்து கொள்ளுமாறு தேமுதிக தலைவர் விஜயகாந்த் உள்ளிட்ட சினிமா மற்றும் அரசியல் பிரபலங்களுக்கு அழைப்பிதழ் வைத்து வருகிறார் டி.ராஜேந்தர்.

தனது மகன் குறளரசனின் திருமணத்தில் கலந்து கொள்ளுமாறு நடிகர் ரஜினிகாந்தை நேரில் சென்று அழைப்பு விடுத்துள்ளார் டி. ராஜேந்தர்.

More articles

Latest article