ஷங்கர் இயக்கத்தில் 1996 ம் ஆண்டு வெளிவந்து வசூலை வாரிக்குவித்த படம் இந்தியன்.

கமலஹாசன் நடித்த இந்தப் படத்தின் இரண்டாம் பாகத்தை எடுக்க கடந்த இரண்டாண்டுகளுக்கு மேலாக போராடிவருகிறார் இயக்குனர் ஷங்கர்.

இந்தியன் 2 வில் ஹீரோவாக கமலஹாசன் நடிக்க கதாநாயகியாக காஜல் அகர்வால் கமிட்டானார்.

கொரோனா பரவல் மற்றும் விபத்து வழக்கு என்று தடைபட்ட நேரத்தில், திருமணம் செய்து கொண்ட காஜல் அகர்வால் தற்போது கருவுற்றிருப்பதால் இந்தப் படத்தில் தொடர்ந்து நடிக்க முடியாத நிலை ஏற்பட்டுள்ளது.

கட்டுப்பாடுகள் தளர்ந்திருப்பதால் மீண்டும் முழுமூச்சாக ஷூட்டிங் நடத்த திட்டமிட்ட இயக்குனருக்கு இது புதிய சிக்கலை ஏற்படுத்தியுள்ளது.

இதனால், காஜல் அகர்வாலை படத்தில் இருந்து நீக்கிவிட்டு அவருக்கு பதில் த்ரிஷா-வை நடிக்க வைக்க முயற்சிப்பதாக தெரிகிறது.

சித்தார்த், ரகுல் ப்ரீத் சிங், ப்ரியா பவானிசங்கர், பாபி சிம்ஹா என்று ஒரு நட்சத்திரப் பட்டாளமே இந்த திரைப்படத்தில் நடிக்க அனிருத் இசையமைக்கிறார்.