றாம்திணை படத்தின் இசை வெளியீட்டு விழாவில் பேசிய நடிகர்- இயக்குநர் ரவிமரியா, அப்படத்தின் கதாநாயகி வைஷாலினியை மிகக் கடுமையாக விமர்சித்துவிட்டார்.

“இந்தப்படத்தின் தலைப்பை மாற்றக்கூடாது என்பதில் தயாரிப்பாளர் பிடிவாதமாக இருந்தார். இயக்குனர் அருண் அவரது பெயரை அவ்வப்போது விதவிதமாக மாற்றிக்கொள்பவர். சுந்தர்.சி மாதிரி பெரிய இயக்குனராக வரவேண்டும் என இப்போது அருண்.சி என மாற்றியுள்ளார். இந்தப்படத்துல வில்லனா ஆரம்பிச்சு காமெடியில முடிக்கிறோமா என அருணிடம் கேட்டேன். ஆனால் அவர் அதெல்லாம் இல்லை, இந்தப்படத்தில் உங்களுக்கு காமெடியே இல்லை என சொல்லி என்னை இயக்குனர் கேரக்டரிலேயே நடிக்கவைத்து புதிய பாதை போட்டுத்தந்துள்ளார். பேய்க்கு லாஜிக் இருக்கு என்பதை இந்தப்படத்தில் தெளிவாக கூறியுள்ளார்” என்ற ரவி மரியா, அடுத்து ஹீரோயின் பக்கம் வந்தார்:

“பாலிவுட்டில் சூப்பர் நடிகர்களான ஷாருக்கான், சல்மான் கான் உட்பட அனைத்து நட்சத்திரங்களும் தங்களது பட புரமோஷன்களுக்காக இருபது நாள்கள் ஒதுக்கி பங்கேற்கின்றனர். ஆனால் இந்த படத்தில் நடித்த கதாநாயகி இந்த விழாவிற்கு வரவில்லை. இப்போது நடிகைகளிடம் அவர்கள் நடித்த படங்களின் புரமோஷன் நிகழ்ச்சிகளில் கலந்துகொள்ள கூடாது என்பது ஒரு நோய் மாதிரி பரவி வருகிறது. புரமோஷன்களில் கலந்துகொள்ளாத நடிகைகளை புறக்கணியுங்கள்” என்றார் ஆவேசமாக.