பல பிரபல நட்சத்திரங்களை உருவாக்கி, பல ஆண்டுகள் கேமிராவின் பின்னால் மட்டுமே இயங்கிய கே.பாலசந்தருக்கே நடிப்பு ஆசை வந்த பின், புதிய இயக்குநர்களுக்கு அந்த ஆசை வந்ததில் வியப்பு இல்லை.

லேட்டஸ்டாக, செல்வ ராகவன் ‘சாணி காகிதம்’ என்ற படம் மூலம் நாயகன் அவதாரம் எடுத்துள்ளார்.

அவரை தொடர்ந்து கும்கி உள்ளிட்ட படங்களை இயக்கிய பிரபு சாலமோனும் நடிகராக ஜொலிக்க போகிறார்.

ஆர்.விஜயகுமார் என்ற புதுமுக இயக்குநர் டைரக்டு செய்யும் ‘அழகிய கண்ணே’ படத்தில் பிரபு சாலமோன் முக்கிய கேரக்டரில் நடிக்க ஒப்புக்கொண்டுள்ளார்.

இந்த படத்தில் சஞ்சிதா ஷெட்டி, கதாநாயகியாக நடிக்க உள்ளார். அடுத்த மாதம் முதல் வாரத்தில் இந்த படத்தின் ஷுட்டிங் ஆரம்பமாகிறது.

நடிக்க ஒப்புக்கொண்டுள்ள பிரபு சாலமோன், தன்னை பிரபல படுத்திய ‘கும்கி- 2’, பாகத்தை உருவாக்கும் முயற்சியிலும் தீவிரமாக ஈடுபட்டுள்ளார்.

-பா.பாரதி.