கொரோனா இரண்டாம் அலையின் தாக்கம் நாளுக்குநாள் அதிகரித்து வருகிறது. தமிழகம் உள்பட இந்தியா முழுவதும் கொரோனாவால் பலியாகும் நபர்களின் எண்ணிக்கை அதிகரித்து வருகிறது.

இறப்பு விகிதமும் அதிமாகியுள்ளது. கொரோனா பாதிப்பு திரைத்துறையிலும் தொடர் அதிர்ச்சி அலைகளை ஏற்படுத்தி வருகிறது.

யக்குநர்கள் எஸ்பி ஜனநாதன், தாமிரா, கே.வி.ஆனந்த், பழம்பெரும் நடிகர்கள் கல்தூண் திலக், பாடகர்கள் எஸ்பிபி, கோமகன், டிகேஎஸ் நடராஜன், நகைச்சுவை நடிகர்கள் விவேக், பாண்டு, நெல்லை சிவா, குணச்சித்திர நடிகர் ‘கில்லி’ மாறன், கஜினி பட தயாரிப்பாளர் சேலம் சந்திரசேகர், தாதா87 படத்தின் இளம் தயாரிப்பாளர் கலைச்செல்வன் உள்ளிட்ட பலரும் அடுத்தடுத்து மரணித்தனர்.

இந்நிலையில் பழம்பெரும் இயக்குநர் மோகன் காந்தி ராமன் காலமாகியுள்ளார். 89 வயதான நிலையில் கொரோனா பெருந்தொற்றால் சென்னை ஓமந்தூரார் அரசு மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வந்த நிலையில் சிகிச்சை பலனின்றி பரிதாபமாக உயிரிழந்துள்ளார்.

பழம்பெரும் இயக்குநர் நீலகண்டனிடம் உதவியாளராக இருந்த இவர் சிவாஜி, எம்ஜிஆர் உள்ளிட்டோரின் படங்களில் பணியாற்றினார். பின்னர் செல்வியின் செல்வன், வாக்குறுதி, ஆனந்த பைரவி, காலத்தை வென்றவன் உள்ளிட்ட திரைப்படங்களை இயக்கினார்.

மலையாளத்தில் விமோஜன சமரம், சுவர்ண விக்ரகம் உள்ளிட்ட திரைப்படங்களை இயக்கிய மோகன் காந்தி ராமன், தமிழில் கில்லாடி மாப்பிள்ளை என்கிற படத்தில் பாண்டிராஜனின் தந்தையாக நடித்துள்ளார்.