‘ஜி ஸ்குவாட்’ என்ற புதிய தயாரிப்பு நிறுவனத்தை லோகேஷ் கனகராஜ் தொடங்கியுள்ளார்.
லோகேஷ் கனகராஜ் இயக்கத்தில் விஜய் நடித்த ‘லியோ’ படம் வெளியான 12 நாட்களில் 540 கோடி ரூபாய் வசூலித்து சாதனை படைத்தது.
இந்த சாதனையை சென்னை நேரு உள்விளையாட்டு அரங்கில் கொண்டாடியது படக்குழு.
ஏற்கனவே கமலஹாசனை வைத்து லோகேஷ் கனகராஜ் இயக்கிய ‘விக்ரம்’ படம் ரூ. 600 கோடிக்கும் அதிகமாக வசூலித்தது.
தற்போது லியோ-வைத் தொடர்ந்து சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த் நடிக்கும் தலைவர் 171 படத்தை இயக்கவுள்ளார் லோகேஷ் கனகராஜ்.
2017 ம் ஆண்டு மாநகரம் படத்தின் மூலம் இயக்குனராக அறிமுகமான லோகேஷ் கனகராஜ் அதனைத் தொடர்ந்து கார்த்தி-யை வைத்து ‘கைதி’ படத்தை இயக்கி நல்ல வரவேற்பை பெற்றதோடு விஜய்-யை வைத்து ‘மாஸ்டர்’ படத்தை இயக்கும் வாய்ப்பையும் பெற்றார்.
Need all your love and support 🤗❤️@GSquadOffl pic.twitter.com/9NWou59tuE
— Lokesh Kanagaraj (@Dir_Lokesh) November 27, 2023
ஐந்து படங்களை இயக்கி முடித்துள்ள லோகேஷ் கனகராஜ் தற்போது புது முயற்சியாக பட தயாரிப்பிலும் இறங்கியுள்ளார்.
‘ஜி ஸ்குவாட்’ என்று பெயரிடப்பட்டுள்ள அவரது பட தயாரிப்பு நிறுவனம் மூலம் அறிமுக இயக்குனர்கள் மற்றும் உதவி இயக்குனர்களுக்கு வாய்ப்பு வழங்க உள்ளதாக கூறியுள்ளார்.