தேனி:

நேற்று இரவு தேனி நாடாளுமன்ற தொகுதிக்கு உட்பட்ட ஆண்டிப்பட்டியில் டிடிவி தினகரனின்  அம்மா மக்கள் முன்னேற்றக் கழகம் கட்சி அலுவலகத்தில் நடைபெற்ற வருமான வரி சோதனை இன்று காலை 5.30 மணி நடை பெற்றதாக ஆண்டிப்பட்டி தேர்தல் அதிகாரி முரளிக்குமார் தெரிவித்து உள்ளர்.

மேலும், இந்த சோதனையின்போது,  ரூ.1.48 கோடி பணம் பறிமுதல் செய்யப்பட்டிருப்பதாகவும், இந்த பணம்  தேனி பாராளுமன்ற வேட்பாளர் தங்கத்தமிழ்செல்வனுக்கு சொந்தமானது என்பது தெரிய வந்திருப்பதாகவும் கூறி உள்ளார்.

தமிழகத்தில் நாளை வாக்குப்பதிவு நடைபெற உள்ள நிலையில்  தேர்தல் பறக்கும் படையினர் தீவிர கண்காணிப்பில் ஈடுபட்டு வருகின்றனர்.

இந்த நிலையில், தேனி மாவட்டம் ஆண்டிப்பட்டியில் உள்ள அமமுக ஒன்றிய அலுவலகத்தில் நேற்று இரவு முதல் இன்று காலை வரை வருமான வரித்துறை அதிகாரிகள் சோதனை நடத்தினர்.

முன்னதாக சோதனைக்கு வந்த அதிகாரிகளை அமமுகவினர் தடுத்ததால், பரபரப்பு ஏற்பட்டது. இதையடுத்து, அங்கு காவலுக்கு வந்த துணை ராணுவத்தினர், வானத்தை நோக்கி துப்பாக்கியால் சுட்டு, கட்சியினரை அங்கிருந்து விரட்டியடித்தனர்.

அதைத்தொடர்ந்து நடைபெற்ற த சோதனையில், ரூ.1.48 கோடி பணம் பறிமுதல் செய்யப்பட் டிருப்பதாக வருமான வரித்துறை தரப்பில் தெரிவிக்கப்பட்டது. இந்த பணம் அமமுக தேனி பாராளு மன்ற தொகுதி வேட்பாளர் தங்கத்தமிழ் செல்வனுக்கு சொந்தமானது என்று கூறப்பட்டது.

ரூ.1.48 கோடியும் 94 பாக்கெட்டுகளில் வாக்காளர் பெயர் பட்டியல் வார்டு எண்ணுடன் வைக்கப்பட்டிருந்தது ஆண்டிபட்டி ஒன்றியத்தில் உள்ள வாக்காளர்களுக்கு கொடுப்பதற்காக ரூ.2 கோடியை கொண்டு வந்துள்ளனர் என்பது விசாரணையின்போது வாக்குமூலம் அளிக்கப்பட்டுள்ளது.

கைப்பற்றப்பட்ட தபால் வாக்குச்சீட்டில் அமமுக வேட்பாளருக்கு வாக்களிக்கப்பட்டு இருந்தது,  வாக்காளர்களுக்கு ஓட்டுக்காக பட்டுவாடா செய்யும் வகையில் வார்டு வாரியாக பண்டல் செய்யப்பட்டு பிரித்து வைக்கப்பட்டிருந்ததும் தெரிய வந்தது.  அதனுடன்  ஆண்டிப்பட்டி சட்டமன்ற தொகுதி வேட்பாளர் ஜெயக்குமாருக்கும்  பரிசு பெட்டகம் சின்னத்திலும் வாக்களிக்குமாறு கோரப்பட்டிருந்தது தெரிய வந்துள்ளது.