டில்லி:

நேரடி வரி வசூல் மூலம் இந்த ஆண்டின் இலக்கை மிஞ்சி 6.8 லட்சம் வருமான வரி கணக்குகள் தாக்கல் செய்யப்பட்டுள்ளது.

2017-18ம் நிதியாண்டின் நேரடி வரி வசூல் என்பது ரூ.9.95 லட்சம் கோடியாக உள்ளது. இது 9.8 லட்சம் கோடி என்ற இலக்கை மிஞ்சிய வசூல் சாதனை படைத்துள்ளது.

அதோடு கடந்த ஆண்டு 5.43 கோடி வருமான வரி கணக்குகள் தாக்கல் செய்யப்பட்டது. இந்த ஆண்டு 6.84 லட்சம் கோடி கணக்குகள் தாக்கல் செய்யப்பட்டுள்ளது.

வரி வளையத்திற்குள் புதிதாக 99.5 லட்சம் பேர் சேர்ந்துள்ளனர் என்று மத்திய நேரடி வரிகள் வாரிய தலைவர் தெரிவித்துள்ளார்.