பெங்களூரு,

நேரடி வருமான வரி வசூலில் பெங்களூரு முதலிடத்தில் இருப்பதாக வருமான வரித்துறை உயர் அதிகாரி கூறி உள்ளார்.

கடந்த 2015-16-ம் நிதி ஆண்டில் மும்பை பகுதியில் இருந்து 2.48 லட்சம் கோடி ரூபாய் அளவுக்கு நேரடி வசூல் இருந்தது குறிப்பிடத்தக்கது.

பெங்களூருவில் நேரடி வரி வருமானம் முந்தைய நிதி ஆண்டைவிட 21 சதவீதம் உயர்ந்து ரூ.90,000 கோடியாக இருக்கிறது.

அதேபோல டில்லியில் 5 சதவீதம் உயர்ந்து ரூ.1.1 லட்சம் கோடியாக இருக்கிறது.  சென்னையில் வருமான வரி வசூல் 18 சதவீதம் உயர்ந்து ரூ.60,000 கோடியாகவும் மற்றும் கொல்கத்தாவில் 15 சதவீதம் உயர்ந்து ரூ.36,500 கோடியாகவும் நேரடி வருமான வரி வசூல் இருக்கிறது.

தேசிய அளவில் கடந்த நிதி ஆண்டில் ரூ.8.47 லட்சம் கோடி நேரடி வரி வசூல் ஆகி இருக்கிறது. முந்தைய நிதி ஆண்டை விட இது 14.2 சதவீதம் உயர்வாகும். நேரடி வரி வசூலுக்கு நிர்ணயம் செய்யப்பட்ட இலக்கு எட்டப்பட்டது.

 

அதே சமயத்தில் மும்பை பகுதிக்கு வருமான வரி வசூலுக்கு நிர்ணயம் செய்யப்பட்ட இலக்கை அடையவில்லை என்றும் கூறி உள்ளார்.