இந்தியாவின் அச்சுறுத்தல்களை சமாளிக்க நேபாளும் இலங்கையும் சீனாவுடன் நெருங்கிப்பழகுவதைப் போலவே இரானின் அச்சுறுத்தல்களை சமாளிக்கும்விதமாக இஸ்ரேலுடனான தனது உறவினை சவுதி அரேபியா புதுப்பிக்கவுள்ளது.

israel 01

இஸ்ரேல்  பிரதமர் நேதன்யாகு மற்றும் சவுதி அரசர் சல்மானின் ஆதரவுடன்  இது நடைமுறைக்கு வந்துள்ளது. அண்டைநாடான இரானின் நெருக்குதல்களைச் சமாளிக்க இஸ்ரேலுடன் உறவினை புதுப்பிக்கும் விதமாக இஸ்ரேலின் டெல் ஆவிவ் சர்வதேச விமான நிலையம் (TLV)- சவுதி இடையே விமானச் சேவை வெள்ளிக்கிழமை முதல் மீண்டும் துவங்கப் பட்டுள்ளது.

israel2

வியாபாரிகள்  இஸ்ரேல் செல்ல இதுவரை ஐரோப்பியா, துருக்கி வழியே பயணித்து வந்தனர். இதனால் பெரும் காலவிரயம் ஏற்பட்டுவந்தது.

தற்பொழுது அரேபிய அரசின் புதியமுடிவினை அடுத்து வியாபாரிகள் மகிழ்ச்சியில் திளைத்துள்ளனர். இனி தங்களின் வியாபாரம் சிறக்கும் எனவும் நம்பிக்கை தெரிவித்துள்ளனர்.

israel1

சவுதி அரசு இன்னும் இஸ்ரேலுடன் அரசாங்க உறவுகளை முழுமையாக புதுப்பிக்கவில்லை. எனினும், முதற்கட்டமாக அமைச்சரவைக் கூட்டத்தின் பரிந்துரையின்பெயரில் விமான போக்குவரத்து புதுப்பிக்கப்பட்டுள்ளது.

பொது எதிரியான இரானை வீழ்த்த அரேபியாவும் இஸ்ரேலும் இணைவது காலத்தின் கட்டாயம்.