டில்லி

ச்சநீதிமன்ற தலைமை நீதிபதி தீபக் மிஸ்ரா மற்ற உச்ச நீதிமன்ற நீதிபதிகளுடன் அவசர ஆலோசனை நடத்தி உள்ளார்.

ஏழு எதிர்க்கட்சிகள் இணைந்து உச்ச நீதிமன்ற தலைமை நீதிபதி தீபக் மிஸ்ராவை  பதவி நீக்கம் செய்யக் கோரி புகார் ஒன்றை துணை ஜனாதிபதி வெங்கையா நாயுடுவிடம் அளித்தனர்.    பதவி நீக்கம் செய்யும் அளவுக்கு அந்தப் புகார்கள் வலுவானவை இல்லை என துணை ஜனாதிபதி அந்த மனுவை நிராகரித்தார்.

அதை ஒட்டி இன்று உச்சநீதிமன்ற நீதிபதி தீபக் மிஸ்ரா மற்றா நீதிபதிகளுடன் அவசர ஆலோசனை ஒன்றை நடத்தி உள்ளார்.     வழக்கமாக 5 நிமிடங்கள் நடக்கும் இந்த ஆலோசனைக் கூட்டம் இன்று 20 நிமிடங்கள் நடந்துள்ளது.   புகார் மனு நிராகரிக்கப் பட்ட உடன் நடந்த இந்த ஆலோசனைக் கூட்டத்தில் பல முக்கிய விஷயங்கள் குறித்து ஆலோசனை செய்யப்பட்டதாக தெரிய வந்துள்ளது.

இந்த ஆலோசனைக் கூட்டத்தின் விளைவாக உச்சநீதிமன்றத்தின் அனைத்து அமர்வுகளும் இன்று 15 நிமிடங்கள் தாமதமாக கூடி உள்ளன.