ன்று வெளியாகி உள்ள தினமலர் வாரமலர் புத்தகத்தில், இந்து மதம் மற்றும் பிராமணர்களை தொடர்ந்து எதிர்த்து வரும், திராவிடர் கழகம் தலைவர் கி. வீரமணியை  மிரட்டும் தொனியில், கேள்விப்பதில் பகுதியில், தினமலர் ஆசிரியரான  அந்துமணி பதில் தெரிவித்துள்ளார்.

அதில், சுதந்திர போராட்டத்தின்போது ஆஷ்துரையை  சுட்டுக்கொன்றது ஒரு உயர் ஜாதிக்காரர் தான், அதுபோல  இந்து அமைப்புகளையும், உயர்ஜாதியினர் மீது போர் தொடுப்பவர்களை கவனிக்கவும் வாய்ப்பு ஏற்படும் என்று மிரட்டி உள்ளார். இது சர்ச்சையை ஏற்படுத்தி உள்ளது.

நாடு முழுவதும் நாடாளுமன்ற தேர்தல் காரணமாக அரசியல் கட்சிகள், ஜாதி மத அமைப்புகள் தேர்தலை எதிர்கொள்ளும் வகையில், பல்வேறு அரசியல் நிகழ்வுகளை மேற்கொண்டு வருகின்றன.

தமிழகத்திலும், பாஜகவை முளைக்க விடாமல் அடியோடு வேரறுருக்க திமுக தலைமையில் மாபெரும் கூட்டணி உருவாகி வருகிறது. இந்த கூட்டணிக்கு திராவிடர் கழகம் உள்பட பல இந்துத்துவா எதிர்ப்பு அமைப்புகளும் ஆதரவு தெரிவித்து வருகின்றன.

இதன் காரணமாக கடும் கோபத்தில் இருக்கும்  பாஜக மற்றும் இந்துத்துவா ஆதரவாளர்கள், தமிழகத்தில் பாஜகவை  எப்படியும் காலூன்ற வேண்டும் என்று பல்வேறு தகிடுத்தங்களை செய்து வருகின்றனர்.

ஏற்கனவே எச்.ராஜா, எஸ்.வி.சேகர் போன்றோர் அதிரடியாக பேசுவதாக கூறி, தமிழக மக்களி டையே மூக்குடைப்பட்ட நிலையில், தற்போது தினமலர் ஆசிரியரான அந்துமணியும், இந்துத்துவாக்கு  ஆதரவாக தி.க.வினரை கடுமையாக மிரட்டும் வகையில் செய்தி வெளியிட்டு உள்ளார்.

இன்றைய தினமலர் வார மலரின் வெளியான அந்துமணி பதில்களில் பகுதியில், கேள்வி ஒன்றுக்கு பதில் அளித்துள்ள அந்துமணி (தினமலர் ஆசிரியர்) இந்து மதங்களையும் உயர் ஜாதி யினரையும் பழித்து பேசுவர்கள்மீது ஜாதி ஆஷ்துரை சுட்டுக்கொன்ற உயர்ஜாதி இளைஞரைபோல,  இவர்கள்மீதும் தாக்குதல் நடத்த வாய்ப்பு உண்டு… கவனமாக இருங்கள் என்று வீரமணி மற்றும் இந்து எதிர்ப்பாளர்களுக்கு மறைமுகமாக எச்சரிக்கை விடுத்துள்ளார்… இது சலசலப்பை ஏற்படுத்தி உள்ளது.

தினமலர் ஆசிரியர் குறிப்பிட்ட ஒரு ஜாதிய இளைஞர்களையிடையே, தி.க.வீரமணியை தாக்குங்கள் என்று வன்முறையை தூண்டும் வகையில் உசுப்பேத்தி எழுதியிருப்பது தமிழகத்தில் பரபரப்பை ஏற்படுத்தி வருகிறது.

இன்றைய தினமலர் வாரமலரின் வெளியான கேள்வி பதில்…

கேள்வி: கே.வெங்கட்ராமன், தென்காசி:

தன்னைத் தானே, ‘தமிழர் தலைவர்’ எனக் கூறிக் கொள்ளும், தி.க., தலைவர், வீரமணி, இந்து மதத்தில் உள்ள, ஒரு ஜாதியை மட்டும் விடாமல் திட்டியும், மட்டம் தட்டியும் வருகிறாரே… மற்ற ஜாதிக்காரர்களைப் பற்றி, வாய் திறப்பதில்லையே… இது ஏன்?

அந்துமணியின் பதில்:

இவர் திட்டும் ஜாதியினர், கம்போ, தடியோ கையில் எடுக்க மாட்டார்கள் என்ற தைரியம் தான்! அதே ஜாதிக்காரனான, வட மாநிலத்தை சேர்ந்த ஒருவன், கோபம் வந்தபோது, இத்தேச விடுதலைக்காக தலைமை நின்றவரை என்ன செய்தான்… அதற்கு முன், மணியாச்சி ரயில் நிலையத்தில், ஆஷ் என்ற வெள்ளைக்கார, கலெக்டரை சுட்டுக் கொன்று, தானும் சுட்டு செத்தான், இதே ஜாதிக்காரன்…

இப்போது, தேர்தல்கள் நெருங்குகின்றன… இந்து மதத்தையும், அதில் ஓர் அங்கமான அந்த ஜாதியையும் எதிர்ப்பவர்கள், ஒன்று கூடி, பொதுக் கூட்டம் நடத்த வாய்ப்புள்ளது…

அப்போது, அதே ஜாதியைச் சேர்ந்த, வெறி கொண்ட இளைஞன் ஒருவன், இவர்களை, ‘கவனிக்க’ வாய்ப்பு ஏற்பட்டு விட்டால்… எனவே, இவர்கள் கவனமாக இருக்க வேண்டும் எனக் கேட்டுக் கொள்கிறேன்!