சென்னை:

இரட்டை இலை சின்னத்தைப் பெற தேர்தல் ஆணைய அதிகாரிகளுக்கு லஞ்சம் கொடுக்க முயன்றதாக  அதிமுக அம்மா அணி துணைப் பொதுச்செயலாளர் டிடிவி தினகரன் மீது டில்லி போலீசார் வழக்கு பதிவு செய்துள்ளனர். இது குறித்து தினகரனிடம் விசாரணை நடத்த டில்லி போலீசார் குழு சென்னை வந்துள்ளது.

விசாரணைக்குப் பிறகு அவர் கைது செய்யப்படலாம் என்றும் தகவல்கள் வெளியாகி உள்ளன. இந்த நிலையில், “ தினகரன் வெளிநாட்டு குடியுரிமை பெற்றவர். மேலும் அவர் இந்தியாவை விட்டு தப்பிச் செல்ல திட்டமிட்டமிட்டிருப்பதாக அவருக்கு நெருங்கிய நபர் ஒருவரே எங்களுக்கு  தகவல் தெரிவித்திருக்கிறார்” என்று டில்லி போலீஸ் வட்டாரம் தெரிவிக்கிறது.

மேலும், தினகரனை தேடப்படும் நபராக அறிவித்துள்ளதோடு,  வெளிநாட்டுக்கு அவர் வெளிநாட்டுக்குத் தப்பிச் சென்றுவிடாதபடி, விமான நிலையங்கள் மற்றும் துறைமுகங்கலில் கண்காணிக்க ஏற்பாடு செய்துள்ளதாகவும் டில்லி போலீஸ் அறிவித்துள்ளது.