சென்னை

தினகரன் ஆதரவாளர்களை நீக்க அதிமுக நிர்வாகிகள் முடிவு எடுத்துள்ளனர்.

நடைபெற்ற ஆர் கே நகர் இடைத்தேர்தலில் தினகரன் வெற்றி பெற்றுள்ளார்.    ஆளும் அதிமுக அணி தோல்வி அடைந்துள்ளது.    அதையொட்டி இன்று அக்கட்சி நிர்வாகிகள் ஆலோசனைக் கூட்டம் ஒன்று நடத்தினர்.   சென்னை ராயப்பேட்டையில் உள்ள அதிமுக கட்சி தலைமை அலுவலகத்தில் இந்தக் கூட்டம் நடைபெற்றது.

முதல்வர் எடப்பாடி,  ஓபிஎஸ்,  அமைச்சர்கள் மற்றும் கட்சி நிர்வாகிகள் பங்கேற்ற இந்தக் கூட்டத்தில் தினகரனை சமாளிப்பது பற்றியும்  இனி எடுக்கப்பட வேண்டிய நடவடிக்கைகள் பற்றியும் விவாதிக்கப் பட்டுள்ளது.     அப்போது மகளிர் அணியினர் “ஸ்லீப்பர் செல் துரோகிகளை உடனே வெளியேற்றுங்கள்”  எனக் கூச்சல் எழுப்பினர்.   அதன் பின் அவர்களை நிர்வாகிகள் சமாதானப் படுத்தினர்.    அதன் பின் தினக்ரன் ஆதரவாளர்களான,  தங்கத் தமிழ் செல்வன், கலை ராஜன், வெற்றி வேல், வேலூர் பார்த்திபன், பாப்புலர் முத்தையா ,  ரங்கசாமி  ஆகியோரை கட்சியில் இருந்து நீக்க முடிவு எடுக்கப்பட்டுள்ளது.

இந்த அதிரடி முடிவு அரசியல் நோக்கர்களிடையே பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது