
விஷால் தயாரித்து நடிக்கும் அடுத்த படம் குறித்த அறிவிப்பு சமீபத்தில் வெளியானது. தற்காலிகமாக ‘விஷால் 31’ எனப் பெயரிடப்பட்டுள்ள இப்படத்தை புதுமுக இயக்குநர் து.பா. சரவணன் இயக்குகிறார்.
அனைத்துத் தரப்பு மக்களும் ரசிக்கும் வகையிலான கமர்ஷியல் படமாக உருவாகவுள்ளது. இப்படத்திற்கு இசையமைப்பாளர் யுவன் சங்கர் ராஜா இசையமைக்கிறார்.
பாலசுப்பிரமணியம் ஒளிப்பதிவு செய்ய, என்.பி. ஶ்ரீகாந்த் படத்தொகுப்பு செய்கிறார். எஸ்.எஸ். மூர்த்தி கலை இயக்கம் செய்ய, வாசுகி பாஸ்கர் உடை வடிவமைப்பு செய்கிறார்.
இந்நிலையில் விஷாலுக்கு ஜோடியாக டிம்பிள் ஹயாதி ஒப்பந்தமாகியுள்ளார் .
ரவி தேஜாவின் கிலாடி படத்தில் நாயகியாக நடித்துள்ளார் . ராஜமௌலியின் ஆர்ஆர்ஆர் படத்திலும் நடித்து வருகிறார். இந்தியில் கார்த்திக் ஆரியனுடனும் ஒரு படத்தில் நடிக்க ஒப்பந்தமாகியுள்ளார்.
இப்படத்தின் படப்பிடிப்பு நேற்று (06.05.2021) பூஜையுடன் தொடங்கியது. இப்படத்தை ஒரேகட்டமாக முடித்து, வரும் ஆகஸ்ட் மாதம் வெளியிட படக்குழு திட்டமிட்டுள்ளது.
[youtube-feed feed=1]