ஜூன் 14-ம் தேதி பிரபல பாலிவுட் நடிகர் சுஷாந்த் சிங் மும்பையில் அவரது இல்லத்தில் தற்கொலை செய்து கொண்டார்.

இவர் கடைசியாக நடித்த தில் பெச்சாரா’ மே மாதம் வெளியாகவிருந்தது . ஆனால் கொரோனா ஊரடங்கால் தள்ளிவைக்கப்பட்டது. ஊரடங்கு நீடிப்பதால் ஓடிடி தளமான ஹாட் ஸ்டாரில் வெளியாகும் என்று அறிவிக்கப்பட்டது. ஆனால், சுஷாந்த் சிங்கின் ரசிகர்களோ அவருடைய இறுதிப்படம் திரையரங்கில்தான் வெளியாக வேண்டும் என்று கோரிக்கை விடுத்தனர்.

ஆனால், ‘தில் பெச்சாரா’ திரைப்படம் ஓடிடி தளத்தில் வெளியாவது உறுதியாகிவிட்டது. ஜூலை 24-ம் தேதி முதல் ஹாட் ஸ்டாரில் இந்தப் படத்தைக் காணலாம்.

[youtube-feed feed=1]