தெலுங்கு திரையுலகில் முக்கியமான தயாரிப்பாளர்களில் ஒருவர் தில் ராஜு. 96 படத்தின் தெலுங்கு ரீமேக்கான ஜானுவை தயாரித்தவர்.

தில் ராஜுவின் மனைவி அனிதா கடந்த 2017ம் ஆண்டு இறந்துவிட்டார்.

 
இதையடுத்து தெலுங்கானா மாநிலம் நிஜாமாபாத் மாவட்டத்தில் இருக்கும் ஸ்ரீ வெங்கடேஸ்வரா கோவிலில் வைத்து தில் ராஜுவுக்கு நேற்று இரவு மறுமணம் நடைபெற்றது.

இந்நிலையில் தில் ராஜுவின் திருமணத்தின்போது எடுத்த புகைப்படங்கள் வெளியாகி வைரலாகியுள்ளது. திருமண ஏற்பாடுகளை தில் ராஜுவின் மகள் ஹன்ஷிதா ரெட்டி தான் கவனித்தாராம். இந்த திருமணத்தில் இரு வீட்டாரையும் சேர்த்து மொத்தமே 10 பேர் தான் கலந்து கொண்டுள்ளனர்.

[youtube-feed feed=1]