கார்த்திக் யோகி இயக்கத்தில் சந்தானம் நடித்துள்ள திரைப்படம் டிக்கிலோனா. இந்த படத்தில் யோகி பாபு, அனகா, ஷிரின், ஆனந்த் ராஜ், முனீஸ்காந்த், மொட்டை ராஜேந்திரன், சித்ரா லட்சுமணன், ஷாரா, அருண் அலெக்ஸாண்டர் உள்ளிட்ட பலர் நடித்துள்ளனர்.
மேலும் தமிழ்த் திரையுலகில் நடிகராக அறிமுகமாகவுள்ளார் கிரிக்கெட் வீரர் ஹர்பஜன் சிங்.
இந்நிலையில் படத்தின் முதல் சிங்கிள் சைக்கிள் வீல போல பாடலின் லிரிக் வீடியோ வெளியானது. ஜிதின் ராஜ் பாடிய இந்த பாடல் வரிகளை அருண் ராஜா காமராஜ் எழுதியுள்ளார். மனைவியிடம் மாட்டிக் கொண்டு தவிக்கும் கணவன் புலம்புவது போல் அமைந்துள்ளது இந்த பாடல். ஷெரிஃப் இந்த பாடலுக்கு கோரியோக்ராஃப் செய்துள்ளார்.