மும்பை: இந்தியாவில் சோதனை அடிப்படையில் அறிமுகம் செய்யப்பட்ட எண்ம ரூபாய் (டிஜிட்டல் ரூபாய்) ரூ.275 கோடிக்கு வணிகமாகியுள்ளதாக ரிசர்வ் வங்கி அறிவிப்பு வெளியிட்டுள்ளது. டிஜிட்டல் ரூபாய் பைலட் ரூ. 275 கோடி மதிப்பிலான 48 ஒப்பந்தங்கள் e₹ மூலம் செய்யப்பட்டன என்றும், ஐசிஐசிஐ வங்கி ஜிஎஸ் 2027 பத்திரங்களை ஐடிஎஃப்சி ஃபர்ஸ்ட் பேங்கிற்கு சிபிடிசியைப் பயன்படுத்தி விற்றது என்று தெரிவிக்கப்பட்டு உள்ளது.

இந்தியாவில் முதன்முறையாக நவம்பர் 1 முதல் டிஜிட்டல் ரூபாய் ( எண்ம ரூபாய்) சேவை தொடங்கப்பட்டுள்ளது இந்த டிஜிட்டல் ரூபாய் சேவையை பாரத ஸ்டேட் வங்கி, பாங்க் ஆப் பரோடா, யூனியம் பாங்க் ஆப் இந்தியா, ஐசிஐசிஐ வங்கி, ஹெச்.டி.எப்.சி வங்கி, யெஸ் வங்கி, கோடாக் மஹிந்தரா வங்கி, ஐடிஎப்சி வங்கி மற்றும் ஹெச்.எஸ்.பி.சி வங்கி என 9 வங்கிளும் பரிவர்த்தணைகளை மேற்கொண்டன.
அதன்படி, இந்தியாவின் முதல் டிஜிட்டல் ரூபாய் திட்டம் சோதனை அடிப்படையில் நேற்று (நவம்பர் 1 செவ்வாய்க்கிழமை) அறிமுகம் செய்யப்பட்டது. அறிமுகம் செய்யப்பட்ட முதல் நாளிலேயே ரூ.275 கோடி மதிப்புள்ள அரசு கடன் பத்திரங்கள் விற்பனை செய்யப்பட்டுள்ளன. இந்த எண்ம ரூபாயைப் பயன்படுத்தி எஸ்பிஐ, பேங்க் ஆஃப் பரோடா, யூனியன் பேங்க், ஹெச்டிஎஃப்சி, ஐசிஐசிஐ, கோட்டக் மகிந்திரா, யெஸ் வங்கி, ஐடிஎஃப்சி, ஹெச்எஸ்பிசி ஆகியiவ டிஜிட்டல் ரூபாய் வரவு வைக்கப்பட்டு அதன் மூலம் கடன் பத்திரங்களை வாங்க வங்கிகள் தொகையை செலுத்தின.
ஆதாரங்களின்படி, ஐசிஐசிஐ வங்கி ஜிஎஸ் 2027 பத்திரங்களை ஐடிஎஃப்சி ஃபர்ஸ்ட் பேங்கிற்கு சென்ட்ரல் பேங்க் டிஜிட்டல் கரன்சியை (சிபிடிசி) பயன்படுத்தி விற்றது. மொத்தம், 275 கோடி ரூபாய் மதிப்பிலான 48 ஒப்பந்தங்கள் டிஜிட்டல் ரூபாய் மூலம் செய்யப்பட்டதாக அவர்கள் தெரிவித்தனர். (CBDC என்பது மத்திய வங்கியால் வெளியிடப்பட்ட நாணயத் தாள்களின் டிஜிட்டல் வடிவமாகும்)
நேற்று டிஜிட்டல் தொடக்கத்தை அறிவிக்கும் போது, ரிசர்வ் வங்கி, மத்திய வங்கிப் பணத்தில் செட்டில்மென்ட் உத்தரவாத உள்கட்டமைப்பு அல்லது செட்டில்மென்ட் அபாயத்தைத் தணிக்க இணை வைப்பதன் மூலம் பரிவர்த்தனை செலவுகளைக் குறைக்கும் என்று கூறியது. மேலும், இந்த ஆண்டு பிப்ரவரியில் நாடாளுமன்றத்தில் தாக்கல் செய்யப்பட்ட மத்திய பட்ஜெட்டில், 2022-23 நிதியாண்டு முதல் டிஜிட்டல் ரூபாயை அறிமுகப்படுத்துவதாக அரசாங்கம் அறிவித்தது. விரைவில் இரண்டாம் கட்டமாக டிஜிட்டல் ரூபாய் சேவையை சில்லறை பணம் பரிமாற்றத்திற்கும் அறிமுகம் செய்யப்படும் என ஆர்பிஐ தெரிவித்துள்ளது.
உலகம் முழுவதும், 60 க்கும் மேற்பட்ட மத்திய வங்கிகள் CBDC களில் ஆர்வத்தை வெளிப்படுத்தியுள்ளன, சில சில்லறை மற்றும் மொத்த விற்பனை பிரிவுகளில் முன்னோடி திட்டங்களின் கீழ் அவற்றை அறிமுகப்படுத்துகின்றன. பலர் தங்கள் சொந்த CBDC கட்டமைப்பை ஆராய்ச்சி, சோதனை மற்றும்/அல்லது தொடங்கு கின்றனர்.

டிஜிட்டல் ரூபாய் என்பது என்ன?
டிஜிட்டல் ரூபாய் என்பது தினமும் நாம் பயன்படுத்தும் ரொக்கப் பணம் போன்றதுதான். மேலும் எளிமையாக கூற வெண்டும் என்றால் டிஜிட்டல் ரூபாய் பரிவர்த்தனை யூபிஐ அல்லது பிற டிஜிட்டல் பண பரிவர்த்தனை போன்றதுதான். இந்தியன் ரிசர்வ் வங்கி வெளியிட்டுள்ள இந்த டிஜிட்டல் ரூபாய்க்கும் ரொக்கப் பணத்திற்கும் எந்த வித்தியாசமும் கிடையாது. ஆனால், தற்போது உள்ளதுபோல பணம் தாள்களில் இல்லாமல் டிஜிட்டல் முறையில் பரிவர்தனைக்கு பயன்படுத்தப்படும்.
டிஜிட்டல் ரூபாய் முழுமையாக பயன்பாட்டுக்கு வந்தால் உங்கள் பாக்கெட்டில் உள்ள பணம் தொலைந்து போகாது. எளிமையாக பணம் பரிவர்த்தனை செய்யலாம். கள்ள நோட்டு போன்ற பிரச்சனைகள் ஏற்பட வாய்ப்பு இல்லை என்று கூறப்படுகிறது.
தனியாரால் நிா்வகிக்கப்படும் கிரிப்டோகரன்சிகளை முறைப்படுத்துவது கடினம் என்பதாலும், அதில் பாதுகாப்பின்மை நிலவுவதாலும் ஆா்பிஐ சாா்பில் எண்ம ரூபாய் வெளியிடப்பட்டுள்ளது.