ர்ணாகுளம்

கேரள தொழிலதிபர் பாபி செம்மனூருக்கு விஐபி வாதிகள் செய்து கொடுத்த்தாக சிறைத்துறை டிஐஜி பணியிடை நீக்கம் செய்யப்பட்டுள்ளார்.

கேரள மாநிலம் காக்கநாடு சிறையில் தொழிலதிபர் பாபி செம்மனூர் இருந்தபோது, சிறைத்துறை சூப்பிரண்டு அலுவலக அறையில் வைத்து அவரும் அவரது 3 நண்பர்களும் சூப்பிரண்டை சந்தித்து உள்ளனர். இந்த் சந்திஉ சிறைத்துறை பதிவேடுகளில் பதிவு செய்யாமல் நடந்துள்ளது.

அதற்கு பின்னர் தொழில் அதிபரை செல்போனில் பேச அனுமதித்தது உள்பட பல்வேறு சலுகைகள் வழங்க டி.ஐ.ஜி. ஏற்பாடு செய்ததும் தெரியவந்துள்ளது.  பாபிக்கு சிறப்பு கவனம் செலுத்தப்பட்டதாக வந்த செய்திகளைத் தொடர்ந்து, பார்வையாளர்களின் நாட்குறிப்பு மற்றும் சிசிடிவி கேமரா காட்சிகள் ஆய்வு செய்யப்பட்டன.

எர்ணாகுளம் காக்கநாடு மாவட்ட சிறையில் பிரபல தொழில் அதிபர் பாபி செம்மன்னூர் சிறப்பு சலுகைகளை பெற்றதாக எழுந்த புகார்களைத் தொடர்ந்து, சிறைத்துறை டி.ஐ.ஜி. அஜய்குமார், சிறை சூப்பிரண்டு ராஜு ஆபிரகாம் ஆகிய 2 பேரையும் பணியிடை நீக்கம் செய்து கேரள அரசு உத்தரவிட்டு உள்ளது.