அரக்கோணம்:

ஜ்ஜி போண்டா மாவு எது என தெரியாமல், வீட்டில் இருந்த பூச்சிக்கொல்லி மாவில் போண்டா செய்து சாப்பிட்ட இளம்பெண் பரிதாபமாக பலியானார். இந்த சம்பவம் பெரும் சோகத்தை ஏற்படுத்தி உள்ளது. கொரோனாவின் ஊரடங்கு அநியாயமாக ஒரு இளம்பெண்ணை காவுவாங்கி வாங்கி உள்ளது.

கொரோனா பரவல் தடுப்பு காரணமாக நாடு முழுவதும் 21 நாட்கள் ஊரடங்கு அமலில் உள்ளது. மக்கள் வீட்டை விட்டு வெளியே வரக்கூடாது என அறிவுறுத்தப்பட்டு உள்ளது. இதனால், அனைத்து வீடுகளில் குடும்பத்தினர் அனைவரும் ஒன்றாக இருந்து அளவளாவியும், கூட்டாக சமைத்து உண்டு, உறங்கி பொழுதை கழித்து வருகின்றனர்.

இந்த நிலையில்,  ராணிப்பேட்டை மாவட்டம் அரக்கோணம் அருகே  எஸ்.ஆர். கண்டிகை பகுதியைச் சேர்ந்த இளம்பெண் பாரதி, வீட்டில் உள்ள தனது கணவர் மற்றும் மாமனார், மாமியாரை அசத்த போன்டா செய்யப்போவதாக அறிவித்து, அதற்கு தேவையான பொருட்களை தனது மாமனாரிடம்  வாங்கிவரச் செய்துள்ளார்.

அவரும், அனைத்தும் வாங்கியதுடன், தனது தோட்டத்துக்கு தேவையான பூச்சி மருந்தையும் வாங்கி அதே பையில் வைத்திருந்துள்ளார்.

இளம்பெண்ணான  பாரதிக்கு  எது போன்டா பஜ்ஜி மாவு என தெரியாமல், பூச்சி மருந்தை, போன்டா மாவு என நினைத்து எடுத்து, போண்டா சுட்டு, அனைவருக்கும் கொடுத்துள்ளார்.

இதை சாப்பிட்ட அனைவருக்கும் வாந்தி, மயக்கம், அருகே உள்ளவர்கள், அவர்களை அருகில் உள்ள அரசு மருத்துவமனையில் சேர்த்து சிகிச்சை அளித்தனர். இதில் சிகிச்சை பலன்றி பாரதி பரிதாபமாக உயிரிழந்தார்.

இந்த சம்பவம் குறித்து,  அரக்கோணம் தாலுகா காவல்துறையினர் விசாரணை நடத்தி வருகின்றனர். இந்த சம்பவம் அந்த பகுதியில் பெரும் சோகத்தை ஏற்படுத்தி உள்ளது.

[youtube-feed feed=1]