திருச்சி: சொன்னிங்களே செஞ்சிங்களா..? CM சார்…  ! திருச்சி அரியலூரில் பிரசாரம் மேற்கொண்ட விஜய்தவெக தலைவர் கேள்வி எழுப்பினார்.

தவெக தலைவர் விஜய்-ன் முதல் தேர்தல் பிரசார பரப்புரை நேற்று (செப்டம்பர் 13ந்தேதி) திருச்சியில் தொடங்கியது. இந்த பிரசாரத்துக்கு தமிழ்நாடு அரசு பல்வேறு கெடுபிடிகளை செய்ததுடன் ஏராளமான கண்டிஷன்களையும் காவல்துறை கூறியது. அவை ஏற்று, விஜய்  சுற்றுப்பயணம் திருச்சியில் தொடங்கியது. இந்த சுற்றுப்பயணத்திற்கு மாநிலம் முழுவதும் இருந்து விஜய் ரசிகர்கள் ஏராளமான குவிந்ததால் கடுமையான போக்குவரத்து நெரிசல் ஏற்பட்டது.  ஏர்போர்ட்டில் இருந்து பிரசாரம் நடைபெறும் பகுதிக்கு வரவே பலமணி நேரம் ஆனது.

இதைத்தொடர்ந்து, நேற்று மாலை தவெக தலைவர் விஜய் மக்கள் சந்திப்பு பிரசாரத்தை இன்று தொடங்கினார். அதன்படி, திருச்சி மார்க்கெட் பகுதியில் தவெக தலைவர் விஜய் பிரச்சாரம் செய்தார். தொடர்ந்து அரியலூரிலும் விஜய் பிரச்சாரம் மேர்கொண்டார்.

இந்த பிரசாரத்தின்போது, தமிழ்நாடு அரசியல் கட்சிகளை விமர்சித்தவர், ஆளும் திமுக அரசை கடுமையாக சாடினார்.

தனது முதல் தேர்தல் பிரச்சாரத்தை இன்று திருச்சி மரக்கடை பகுதியில் துவங்கி பேசுகையில், அந்த காலத்தில் குலதெய்வ கோயிலில் சாமி கும்பிட்டுவிட்டு தான் போருக்கு செல்வார்கள். அதுபோல தான் அடுத்த வருடம் நடக்க உள்ள தேர்தலுக்கு திருச்சியில் குலதெய்வமாக நினைத்து மக்களை சந்திக்க வந்துள்ளேன். நல்ல காரியங்களுக்கு ஒரு சில மண்ணைத்தொட்டால் நல்லதென பெரியவர்கள் சொல்வார்கள். அப்படி தான் திருச்சியில் தொடங்கினால் திருப்புமுனை ஏற்படும் என்று வந்துள்ளேன். ஜனநாயக போருக்கு தயாராவதற்கு முன் உங்களை சந்திக்க வந்துள்ளேன்.

1956 அறிஞர் அண்ணா தேர்தலில் நிற்க நினைத்ததும் திருச்சியில்தான். 1974-ல் எம்ஜிஆர் முதல் மாநாடு நடத்தியது திருச்சியில் தான். திருச்சிக்கு என்றே நிறை வரலாறு இருக்கு. கல்விக்கு பேர் போன இடம். கொள்கையுள்ள மண் இது. இன்னைக்கு உங்கள எல்லாரையும் பார்க்கும் போது மனசுக்குள்ள ஒரு பரவம் ஏற்படுகிறது என்று தெரிவித்துள்ளார்.

”2026 ஜனநாயகப் போருக்கு தயாராவற்கு முன்பு மக்களை சந்திக்க வந்துளேன்.உங்க விஜய் நான் வர்றேன்னு நமது மதுரை மாநாட்டில் சொன்னதுபோலவே உங்களைப் பார்க்க வந்திருக்கிறேன். உங்கள் சார்பாக நம்மை மேலேயும் கீழேயும் மிக மோசமாக ஆண்டுகொண்டிருக்கும் பா.ஜ.க.வையும், தி.மு.க.வையும் கேள்வி கேட்க வந்துள்ளேன். ஒரே நாடு ஒரே தேர்தல் திட்டம் நடைமுறைக்கு ஒத்து வராத திட்டம். இதன் மூலம் தேர்தல் தில்லுமுல்லுதான் நடக்கும்.அதற்காகத்தான் ஒன்றிய பா.ஜ.க. அரசு இதை கொண்டு வருகிறது. பார்லிமெண்ட் தொகுதிகள் மறுசீராய்விலும் தென்னிந்தியாவிற்கு எதிராக மிகப்பெரிய சதி உள்ளது.இதை தமிழக வெற்றிக்கழகம் ஏற்காது.எப்போதும் எதிர்க்கும்.

முதல்வர் ஸ்டாலின் சார் விட்ட ரீல்கள் எல்லாம் பாதியிலேயே அறுந்துபோய்விட்டது. அப்படி அறுந்துபோன ரீல்களைப் பற்றி சொல்லட்டுமா?.

நீட் தேர்வு ரத்து, கல்வியை பொதுப்பட்டியலுக்கு மாற்ற நடவடிக்கை,

மாத மின்சாரக் கட்டணம்,

பகுதிநேர ஆசிரியர்களுக்கு பணி நிரந்தரம்,

தமிழகத்தில் இருக்கும் வேலை வாய்ப்புகளில் 75% தமிழர்களுக்கு,

தூய்மைப் பணியாளர்கள் பணி,ஊதியம்,ஓய்வூதியம் போன்ற கோரிக்கைகள் நிறைவேற்றம்,

அனைத்து அரசு வேலை வாய்ப்புகளிலும் பெண்களுக்கு 40% முன்னுரிமை,

இலங்கைத் தமிழர்களுக்கு பொது வாக்கெடுப்பு போன்ற வாக்குறுதிகளை அளித்தீர்களே அவற்றை நிறைவேற்றினீர்களா…? CM சார் என்று கேள்வி எழுப்பினார்.

பேருந்தில் பெண்களை இலவசமாக அனுமதித்துவிட்டு ஓசி ஓசி எனச் சொல்லிக்காட்டுகிறார்கள்.

டீசல் விலை லிட்டருக்கு ரூ.3 குறைக்கப்படும் என்ற வாக்குறுதி என்ன ஆனது?

மாணவர்களின் கல்வி கடன் ரத்து செய்யப்படும் என்ற வாக்குறுதி என்ன ஆனது?

பெண்களுக்கு ஆயிரம் ரூபாய் கொடுத்துவிட்டு சொல்லிக் காட்டி அசிங்கப்படுத்துகிறீர்கள்?

ஏழைகளின் ஏழ்மையை பயன்படுத்தி கிட்னி திருட்டு மோசடி நடக்கிறது. அதுவும் திமுக எம்எல்ஏவுக்கு சொந்தமான இடத்தில் தான் நடக்கிறது. ஆனால், அதை திருட்டு இல்லை முறைகேடு என திமுக கூறுகிறது.

கொடுத்த வாக்குறுதிகளை திமுக அரசு நிறைவேற்றவில்லை நம்பிக்கை மோசடி செய்துள்ளது என்று கடுமையாக சாடியவர்,  திருச்சி மாவட்டத்திற்கு 2 அமைச்சர்கள் இருந்தும் என்ன பயன். திருச்சியில் மக்கள் பிரச்சனைகளை தீர்க்காமல் மணல் அள்ளுவதில் திமுக அரசு நன்றாக காசு பார்க்கிறது. கல்வி, மின்சாரம், மருத்துவம் போன்ற அடிப்படை தேவைகளை தவெக செய்து கொடுக்கும். பெண் பாதுகாப்பில், சட்ட பிரச்சனைகளில் No Compromise. நடைுமறைக்கு எது சாத்தியமோ அதையே நாங்கள் சொல்வோம். வெற்றி நிச்சயம். மீண்டும் சந்திக்கும் வரை, நன்றி வணக்கம் என்று கூறியுள்ளார்.

இதைத்தொடர்து அரியலூர் நிகழ்ச்சியில் பேசும்போது, மக்களின் அன்புக்காக எவ்வளவு பெரிய வருமானத்தையும் தூக்கி எறியலாம். என்னங்க பெரிய பணம். அரசியலுக்கு வந்துதான் பணத்தை சம்பாதிக்கனுமா என்ன. உங்களுக்காக உழைப்பதைத் தவிர வேறு எந்த எண்ணமும் வேற வேலையும் எனக்கு இல்லை

எப்பப் பாரு மக்கள் கடலோடு, மக்கள் கடலாகவே இருக்கானே என்று எதிர்க்கட்சிகள் நம்மைப் பற்றி கண்ணாபின்னாவென்று பேச ஆரம்பித்துள்ளனர். நாம மரியாதையாக பேசினால் கூட தவறாக எடுத்துக் கொள்கிறார்கள். யார் என்ன சொன்னாலும் அண்ணா சொன்ன அந்த பன்ச்தான்.. வாழ்க வசவாளர்கள். அப்படின்னு சொல்லிட்டுப் போய்ட்டே இருக்க வேண்டியதுதான்.

மதுரை மாநாட்டில் சொன்னது போல உங்களை சந்திக்க வந்துள்ளேன். பாசிச பாஜக அரசையும், பாய்சன் திமுக அரசையும் கேள்வி கேட்பதற்காக வந்துள்ளேன். இந்த பாஜக அரசு கொஞ்ச நஞ்ச கொடுமையாங்க செய்யுது. பீகாரில் 65 லட்சம் வாக்காளர்களைக் காணோமாம். ஓட்டுத் திருட்டு. வீட்டு நமம்பர் 0 போட்டு ஓட்டேர் ஐடி கொடுத்திரு்ககாங்க.

ஒரே நாடு ஒரே தேர்தல் என்று சொல்கிறார்கள். மாநில அரசுகளைக் கலைத்து விட்டு ஒட்டுமொத்தாக தேர்தல் வைக்கும் ஐடியா. வேறென்ன, ஒரே நேரத்தில் தில்லமுல்லுகளை ஈசியா செய்ய முடியுமே அதற்காக. இதுக்குப் பெயர் என்ன, ஜனநாயகப் படுகொலைதானே.

மறுபக்கம் தொகுதி மறு சீராய்வு. அதிக தொகுதிகளை வட இந்தியாவுக்குக் கிடைக்குமாறு மோசடி செய்து வருகிறார்கள். இதை தவெக முதலிலேயே எதிர்த்தது. தொடர்ந்து எதிர்ப்போம். தென்னிந்தியாவின் பவரைக் குறைப்பதற்காக செய்யப்படும் மோசடி வேலை இது.

பாஜக அரசுதான் துரோகம் செய்யுதுன்னு பார்த்தா, திமுக அரசும் நம்ப வைத்து ஏமாற்றுது. நான், நீங்க எல்லாருமே நல்லது செய்வாங்கன்னு நினைச்சுதான் அவங்களைத் தேர்ந்தெடுத்தோம். 505 தேர்தல் வாக்குறுதிகளை கொடுத்தார்கள். எத்தனை வாக்குறுதிகளை திமுக அரசு நிறைவேற்றியிருக்கு. முக்கால்வாசி கூட நிறைவேற்றாமல், எல்லாவற்றையும் நிறைவேற்றிட்டோம்னு மனசாட்சி இல்லாமல் கதை விடறீங்களே.. மை டியர்.. வேண்டாம் வேண்டாம் உங்களுக்குத்தான் ஆசையா கூப்பிட்டா பிடிக்க மாட்டேங்குதே.. சிஎம் சார்.. நீங்க விடுவது அம்புட்டுமே ரீல்ஸ்தான். அதில் பாதி அறுந்தும் போச்சு. 

அரியலூர் மாவட்டத்திற்கான திட்டங்களை நிறைவேற்றாதது ஏன். கங்கை கொண்ட சோழபுரம் கோவிலை முறையாக பராமரிக்கவில்லை. முந்திரி உற்பத்திதான் பிரதானம். முந்திரி தொழிற்சாலை என்னாச்சுன்னு தெரியலை.  சிமென்ட் மாசுபாட்டிலிருந்து மக்களைக் காக்கவில்லை. போதுமான பேருந்து வசதி இல்லையே. இத்தனைக்கும் இந்த மாவட்டத்துக்காரர்தான் போக்குவரத்து அமைச்சர்.

என்னடா இவன் கேள்வியா கேக்கறானே வந்தா என்னா செய்வான்னுதானே கேக்கறீங்க. தீர்வை நோக்கி போவதும், தீர்வைக் காட்டுவதும்தான் நமது லட்சியமே.  தேர்தல் அறிக்கையில் விளக்காமாக, தெளிவாக எல்லாவற்றையும் சொல்வோம். அதற்கு முன் பொய்யான வாக்குறுதிகளைத் தர மாட்டோம்.  மனசாட்சி உள்ள மக்களாட்சியைத் தருவோம் என்றார் விஜய்.

இவ்வாறு பேசினார்.