‘’பத்மபூஷன் விருதை எதிர் பார்க்கவில்லை’’ பின்னணி பாடகி சித்ரா நெகிழ்ச்சி
தமிழ்நாட்டில் ‘சின்னக்குயில் சித்ரா’’ என்று அழைக்கப்படும் பின்னணி பாடகி கே.சி.சித்ராவுக்கு மலையாள பூமியில் ‘’ கேரளத்து நைட்டிங்கேல்’’ என நாம கரணம் சூட்டி உள்ளனர்.
இவரது சாதனைகள் அளவற்றது.
தென்னிந்திய மொழிகளில் 25 ஆயிரம் சினிமா பாடல்கள் பாடியுள்ளார்.
இது தவிர 7 ஆயிரம் தனிப்பாடல்களும் பாடி இருக்கிறார்.
ஆறு முறை தேசிய விருது பெற்று சாதனை புரிந்துள்ள சித்ராவுக்குக் கடந்த 2005 ஆம் ஆண்டு பத்மஸ்ரீ விருது வழங்கப்பட்டுள்ளது.
இந்த விருதுகளுக்கு ஒரு மகுடமாக , மத்திய அரசு சித்ராவுக்குப் பத்மபூஷன் விருது அளித்து இப்போது பெருமைப் படுத்தியுள்ளது.
‘’இந்த விருதை நான் எதிர் பார்க்கவில்லை’’ எனத் தெரிவித்துள்ள சித்ரா’’ ரசிகர்கள், இசை அமைப்பாளர்கள், உள்ளிட்டோருக்கு நன்றிக்கடன் பட்டுள்ளதாகக் குறிப்பிட்டுள்ளார்.
= பா.பாரதி.