சூரத்: குஜராத்தின் சூரத்திலுள்ள +11 அளவிலான வைரங்களின் விலை, தற்போது 30% அளவிற்கு வீழ்ச்சியடைந்துவிட்டதாக தகவல்கள் தெரிவிக்கின்றன. இதற்கு காரணம் தமிழ்நாடுதான் என்றும் கூறப்படுகிறது.

சூரத்திலுள்ள இந்த வைரம் வெட்டும் மற்றும் பட்டை தீட்டும் தொழில்துறைதான், உலகிலேயே இந்தவகையில் செயல்படும் மிகப்பெரிய தொழில்துறையாகும்.

இந்த +11 வைரங்கள், தமிழகத்திலிருந்து திடீரென வந்து குவிந்துவிட்டதாலேயே, 30% அளவிற்கு விலை இறங்கிவிட்டதாக குற்றம் சாட்டப்படுகிறது.

சூரத் வைர மார்க்கெட் தரப்பில் கூறப்படுவதாவது; கடந்த 2016ம் ஆண்டு பணமதிப்பிழப்பு நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டபோது, தமிழ்நாட்டின் முன்னாள் முதல்வர் ஜெயலலிதா தரப்பில் +11 வைரங்கள் ஏராளமாக வாங்கப்பட்டன.

ஆனால், ஜெயலலிதா இறந்தபிறகு, அந்த வைரங்கள் சூரத் தொழில்துறைக்கே மீண்டும் திருப்பிவிடப்பட்டு வெள்ளமென பாய்ந்தன. இதுதான் இந்த 30% விலை வீழ்ச்சிக்கான முக்கிய காரணம் என்று குற்றம் சாட்டப்படுகிறது.

– மதுரை மாயாண்டி