டியூக் பல்கலைக்கழகம், அமெரிக்கா

மெரிக்க விஞ்ஞானிகள் சர்க்கரை நோயை கட்டுக்குள் வைத்திருக்க, மாதம் ஒருமுறை போட்டுக்கொள்ளும் ஊசி மருந்தை கண்டுபிடித்துள்ளனர்

உலகமெங்கும் அதிகம் காணப்படுபவர்கள் சர்க்கரை நோயாளிகள்.

சர்க்கரை நோயாளிகளில் டைப்2 எனப்படும் இரண்டாம் வகை நோயாளிகளே அதிகம்.

இவர்களில் பலர் இன்சுலின் மாத்திரைகள் சாப்பிட்டு ரத்தத்தின் சர்க்கரை அளவை கட்டுக்குள் வைத்துள்ளனர்.

மற்றவர்கள் இன்சுலின் ஊசியை தினம் பயன்படுத்துகிறார்கள்.

அவர்களுக்கு ஒரு நற்செய்தியாக அமெரிக்க டூக் யுனிவர்சிடியை சேர்ந்த ஆராய்ச்சி விஞ்ஞானிகள் மாதம் ஒருமுறை போட்டுக்கொள்ளும் ஊசி மருந்தை பற்றி தெரிவிக்கின்றனர்

இது வரை நடந்த பரிசோதனைகளில் இந்த மருந்தின் செயல்பாடு அபாரமாக இருப்பதாக சொல்கின்றனர்

தற்போது ஆராய்ச்சி செய்யப்பட்டு வரும் ஊசி மருந்தின் மூலக்கூறு, இந்த மருந்தை ஊசி மூலம் உடலில் செலுத்தியபின் தினமும் சிறிது சிறிதாக  கரைந்து ரத்தத்தில் கலக்குமாறு வடிவமைக்கப் பட்டுள்ளது.

முதலில் இந்த மருந்தை எலிகளிடம் பரிசோதித்த போது 10 முதல் 14 நாட்களில் முழு மருந்தும் கரைந்து விட்டது.

மேலும் பல விஞ்ஞான மாறுதல்களுக்குப் பிறகு தற்சமயம் இந்த மருந்து முழுவதும் கரைய 4 வாரங்கள் ஆகிறது.

இந்த 4 வாரங்களில் பரிசோதனை எலிகளின் ரத்த சர்க்கரை அளவு கட்டுப்பாட்டுக்குள் இருந்தது குறிப்பிடத்தக்கது

இந்த மருந்தை மேலும் பல பரிசோதனைகள், மற்றும் சில மாறுதல்கள் ஏற்படுத்துவதன் மூலம் விரைவில் மனிதருக்கு பயன்படுத்த முடியும் எனவும்,  குறைந்தது ஒரு மாதம் வரை ஒரே ஊசி போதும் எனவும் ஆராய்ச்சியாளர்கள் அற்விக்கின்றனர்