சென்னை சூப்பர் கிங்ஸ் அணியின் கேப்டன் தல தோனியின் மகள் ஷிவா குறும்புக்கார பெண் என்பது அனைவருக்கும் தெரியும். ஆனால், அவருக்கு தமிழ் தெரியும் என்பதை யாரும் அறிந்திருக்க மாற்றார்கள்.
நேற்று நடைபெற்ற ஐபிஎல் 2வது தகுதிச்சுற்றி போட்டியில் சிஎஸ்கே வெற்றி பெற்றதும் மைதானத்துக்குள் வந்து விளையாடிய தோனியின் மகள், தற்போது தமிழில் பாடம் எடுக்கும் காட்சி வெளியாகி உள்ளது.
குழந்தை ஷிவா அழகாக தமிழின் உயிரெழுத்துக்களான அ, ஆ, இ, ஈ என அனைத்து எழுத்துக் களையும் கிரிக்கெட் வீரர் ரிஷபந் பண்ட்டுக்கு, ஆசிரியையாக மாறி சொல்லிக் கொடுக்கும் வீடியோ வைரலாகி வருகிறது…
ஆசிரியை போன்ற தோரணையில் அழகாக பாடம் சொல்லிகொடுக்கும் ஷிவாவின் அழகே அழகு… அந்த வீடியோவை நீங்களும் பாருங்களேன்….