ராஞ்சி

ந்திய கிரிக்கெட் அணியில் இருந்து ஓய்வு பெற்றுள்ள தோனி தற்போது விவசாயத்தில் இறங்கி துபாய்க்குக் காய்கறிகளை ஏற்றுமதி செய்யத் திட்டமிட்டுள்ளார்.

உலகப் புகழ் பெற்ற கிரிக்கெட் வீரர் மகேந்திர சிங் தோனி தற்போது சர்வதேச கிரிக்கெட் இந்திய அணியில் இருந்து ஓய்வு பெற்றுள்ளார்.  தற்போது இவர் புத்தாண்டு கொண்டாட்டத்தை முன்னிட்டு துபாயில் தன் குடும்பத்துடன் துபாய் சென்றுள்ளார்.  இவருக்குத் துபாயில் ஏராளமான ரசிகர் பட்டாளம் உள்ளது.  இவர்களைத் தனது பிற்கால திட்டங்களுக்குப் பயன்படுத்த தோனி திட்டமிட்டுள்ளார்.

இவருக்கு ராஞ்சி நகர் அருகில் உள்ள செம்போ என்னும் கிராமத்தில் பெரிய பண்ணை வீடு உள்ளது.  தோனி இங்குள்ள 43 ஏக்கர் நிலப்பரப்பில் 10 ஏக்கர்களில் தக்காளி, கோஸ், பட்டாணி, பப்பாளி எனப் பல காய்கறிகளை பயிரிட்டுள்ளார்.  இந்த காய்கறிகளுக்கு ராஞ்சியில் நல்ல கிராக்கி உள்ளது.  ஆயினும் தோனி இவற்றை துபாய்க்கு ஏற்றுமதி செய்ய முடிவு எடுத்துள்ளார்.

ஜார்க்கண்ட் மாநில விவசாயத்துறை இந்த ஏற்றுமதிக்கான பொறுப்பை எடுத்துக் கொண்டுள்ளது.  இந்த காய்கறிகள் துபாயில் உள்ள ஆல் சீசன் ஃபார்ம் ஃப்ரெஷ் ஏஜன்சிக்கு அனுப்பப்பட்டு அங்கிருந்து வளைகுடா நாடுகள் முழுவதும் விற்கப்பட உள்ளது.   இத காய்கறிகள் தோனி வீட்டுக் காய்கறிகள் என விற்பனை செய்ய உள்ளதாகக் கூறப்பட்டுள்ளது.