சென்னை:
ஐபிஎல் போட்டிகளில் 5000 ரன்களை இன்று கடந்தார் சென்னை அணி கேப்டன் மகேந்திர சிங் தோனி.
மொத்தமாக 235 ஐபிஎல் போட்டிகளில் விளையாடியுள்ள தோனி, 4992 ரன்களை அடித்துள்ளார். இன்று தொடர்ச்சியாக 2 சிக்சர்கள் அடித்ததன் மூலம் 5000 ரன்களை கடந்துள்ளார். இதன் மூலம் 5000 ரன்களை கடந்த ஏழாவது வீரர் என்ற பெருமையை பெற்றுள்ளார்.
இந்த பட்டியலில் பெங்களூரு அணி வீரர் விராட் கோலி , சென்னை அணி முன்னாள் வீரர் சுரேஷ் ரெய்னா டெல்லி அணி வீரர் டேவிட் வார்னர் மும்பை அணி வீரர் ரோஹித் சர்மா பெங்களூரு அணி முன்னாள் வீரர் ஏ.பி டி வில்லியர்ஸ் மற்றும் பஞ்சாப் வீரர் ஷிகர் தவான் ஆகியோர் உள்ளனர்.
Patrikai.com official YouTube Channel