தோனிக்கு பாராட்டு தோரணம் கட்டிய சினிமா நட்சத்திரங்கள், இயக்குனர்கள்..

Must read

இந்திய கிரிக்கெட்டில் எத்தனையோ வீரர்கள் வந்து போய்க்கொண்டிருக்கின் றனர். ஆனால் ரசிகர்களையும் தாண்டி சினிமா நட்சத்திரங்களே விரும்பி அருகில் நின்று புகைப்படம் எடுத்துக்கொண்ட ஒரு வீரர் தோனிதான். அவர் சர்வதேச கிரிக் கெட் போட்டியிலிருந்து ஓய்வெடுப்பதாக அறிவித்தவுடன் இதுவரை அவர் செய்த சாதனைகளை சொல்லி திரையுலகினர் அவரை பாராட்டி உள்ளனர். அவர்கள் கட்டிய பாராட்டு தோரணங்கள் இதோ..
டைரக்டர் மோகன்ராஜா: நான் ஒரு கிரிக்கெட் வெறியன். மெதுவாக எனது வாழ்கை மாற்றங்களால் முன்னுரிமைகள் மாறின. முதலிடத்திலிருந்த கிரிக்கெட் இரண்டாம் பட்சமாக மாறியது. தோனி வருகைக்கு பிறகு மீண்டும் கிரிக்கெட் வெறியனாக மாறினேன். எங்களுடைய சக்தியை என்றும் உயிர்ப்புடன் வைத்திருக் கச் செய்த தோனிக்கு எவ்வளவு நன்றி சொன்னாலும் போதாது.
கார்த்திக் நரேன்: நீங்கள் தந்திருக்கும் நினைவு மறக்கமுடியாதது. நன்றி. உங்களை கண்டவுடன் தோனி, தோனி என்று கோஷமிடுவேன். உங்களை உடைந்த இதயத்துடன் வழியனுப்புகி றேன். கடைசியாக ஒருமுறை தோனி, தோனி என கோஷமிட்டுக்கொள்கிறேன்.
எஸ்.தமன்: நீங்கள் எங்களின் இயத்திலி ருந்து எப்போதும் ஓய்வு பெற மாட்டீர்கள். நீங்கள் இந்த நூற்றாண்டின் கேப்டனாக எங்கள் மனதில் வாழ்நாள் முழுவதும் நிரம்பி இருப்பீர்கள்.
சிவகார்த்திகேயன்: அதிகபட்சமாக உற்சாகப்படுத்தி எங்களை மகிழ்வித் ததற்கு தோனிக்கு பெரிய நன்றி. நீங்கள் எப்போதும் ஒரு அற்புத மான தலைவர்.
விக்ரம் பிரபு: சின்ன தல! உங்களைச் சந்தித்ததில் நான் மிகவும் மகிழ்ச்சியடை கிறேன், கடந்த சில ஆண்டுகளாக உங்களை ஒரு மனிதராக நான் அறிந்து கொண்டேன். நீங்கள் கிரிக்கெட் ஆடினா லும் ஆடாமல் இருந்தாலும் மின்னும் மாணிக்கம். மிகவும் முழுமையான கிரிக்கெட் வீரர். ஒரு சவாலை எடுத்துக் கொண்டு, திட்டமிட்டதை சரியாகச் செய்தார். தோனி உங்கள் சாதனைகளுக்கு நன்றி.


நடிகை வரலட்சுமி: தோனி போன்ற ஒரு மனிதரைப்பற்றி என்ன சொல்ல முடியும். அவருக்கு நாம் எல்லோரும் நன்றி சொல்ல முடியும் உங்களது கிரிக்கெட் விளை யாட்டு மூலம் எங்களின் தருணங்களை உற்சாகப்படுத்திய உங்களுக்கு எங்களின் நன்றி.
விஷ்ணு விஷால்: ஆச்சரியமான ஆரம்பம்.. அற்புதமான பயணம்.. அட்டகாசமான விளையாட்டு அணுகு முறை.. அற்புதமான தலைவர் … அற்புத மான நினைவுகள்.. அற்புதமான ஓய்வு.
நடிகர் மோகன்லால்: தோனி, மற்றும் ரைனாவுக்கு பிரியா விடை.
ஹரிஷ்கல்யாண்: எல்லா நினைவு களுக்கும் போதுமான நன்றி சொல்ல முடியாது! என்றென்றும் கேப்டன் கூல் நீங்கள்தான்.
சாந்தனு: எங்களுக்கு சிறந்த நினைவு களை வழங்கியுள்ளீர்கள் இந்திய கிரிக்கெட் நீங்கள் இல்லாமல் எப்போதும் ஒரே மாதிரியாக இருக்காது. உலகக் கோப்பையை திரும்பக் கொண்டு வந்த உங்களுக்கு கோடானுகோடி நன்றிகள்.
இவ்வாறு தமிழ் நடிகர் மட்டுமல்ல இந்திய திரையுலக நடசத்திரங்கள் பலரும் தோனிக்கு வாழ்த்தும், பிரியாவிடையும் தந்துக்கொண்டிருக்கிறர்கள்.

More articles

Latest article